போரடிப்பதை விரட்டவும், மண்டையை உடைக்கும் தலைவலியிலிருந்து சற்று நிம்மதி பெறவும் கூட பெண்கள் செக்ஸ் உறவை விரும்புவதாக அந்த ஆய்வு கூறுகிறது. அதாவது காதல், காமம் சம்பந்தப்படாத காரணங்களுக்காகவும் கூட பெண்கள் செக்ஸ் உறவை விரும்புவதாக இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாம். சில நேரம் ஆண்கள் மீது பரிதாபப்பட்டும் கூட செக்ஸ் உறவுக்கு பெண்கள் முன் வருகிறார்களாம்.
டெக்ஸாஸ் பல்கலைக்கழக பேராசிரியர்களான சின்டி மெஸ்டன் மற்றும் டேவிட் பஸ் ஆகிய இருவரும் இதுதொடர்பான ஆய்வு நூலை வெளியிட்டுள்ளனர். அதில் பெண்கள் உடலுறவை விரும்புவதற்கான 200 காரணங்களை விளக்கியுள்ளனர்.
போரடிப்பதிலிருந்து விடுபட, மன அமைதிக்காக, தலைவலியிலிருந்து தப்ப, பார்ட்னர்கள் தங்களை நல்ல டின்னருக்கு அழைத்துச் சென்றதற்கு 'தேங்க்ஸ்' சொல்வதற்காக, 'பாவமாக' இருக்கிறதே என்ற பச்சாதாபத்திற்காக என்று ஏகப்பட்ட காரணங்களை இவர்கள் அந்த நூலில் அடுக்கியுள்ளனர்.
பெரும்பாலான ஆண்களுக்கு பெண்களைப் பார்த்ததுமே அவர்கள் மீது மோகம் பிறக்கிறது. ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை. ஆண்களைப் பார்த்ததுமே அவர்களுக்கு மோகம் வருவதில்லை என்றும் இந்த பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.
தங்களது ஆய்வுக்காக 1006 பெண்களை இவர்கள் பேட்டி கண்டுள்ளனர். இந்த பேட்டியின்போது பல சுவாரஸ்யமான தகவல்களும் கிடைத்தனவாம்.
சிலர் தங்களது செக்ஸ் திறமைகளை மேம்படுத்திக் கொள்வதற்காக அடிக்கடி உறவுக்கு தயாராவதாக கூறியுள்ளனர்.
பெரும்பாலானவர்கள் சொன்ன பதில், மன அமைதிக்காகவும், உடல் திருப்திக்காகவும் செக்ஸ் உறவை நாடுவதாக கூறியுள்ளனர்.
இன்னும் சிலரோ, தங்களது பார்ட்னர்களிடம் சில வேலைகளைச் செய்யக் கொடுத்து அதை அவர்கள் செய்வதற்காக செக்ஸ் உறவுக்கு உடன்படுவதாகவும் (அதாவது லஞ்சம்!) கூறியுள்ளனர்.
ஒரு பெண் கூறுகையில், எனக்கு போரடித்தால் பிடிக்காது. அந்த மாதிரி உணர்வு வந்தால் உடனே செக்ஸ் வைத்துக் கொள்வேன். இதனால் போரடிப்பது போன்ற உணர்வும் போகும், கொஞ்சம் ரிலாக்ஸ்டாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார்.
இன்னொரு பெண் கூறுகையில், நான் இரண்டு பேரை சந்தித்தேன். அவர்களைப் பார்க்கவே பாவமாக இருந்தது. இதனால் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.
பத்தில் ஒரு பெண், தங்களுக்கு ஏதாவது பரிசு, நல்ல இரவு விருந்து கிடைத்ததற்கு நன்றிக் கடனாக செக்ஸ் உறவை தங்களது பார்ட்னர்களுக்கு வழங்குவதாக கூறியுள்ளனர்.
ஒரு பெண்மணி கூறுகையில், எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். கடவுளை நெருங்க செக்ஸ் சிறந்த வழி என்பது எனது எண்ணம். அதனால் செக்ஸ் உறவு கொள்ளும்போது கடவுளுக்கு அருகில் செல்வது போல உணர்கிறேன். இதனால் செக்ஸ் உறவை விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
அதனால்தான் சாமியார்களுக்கும், செக்ஸுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறதோ...!!!