•  

தினசரி 13 முறை செக்ஸ் பற்றி நினைக்கும் ஆண்கள்!

ஆண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 13 முறை செக்ஸ் குறித்து நினைப்பதாக ஒரு சர்வே செய்து தெரிவித்துள்ளனர்.

ஒன்போல்.காம் என்ற இணையதளம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. 3000 ஆண்களிடம் கருத்துக் கேட்டு இந்த முடிவை அது அறிவித்துள்ளது.

பெண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்து முறை செக்ஸ் குறித்து நினைக்கிறார்களாம். ஆனால் ஆண்களோ 13 முறை நினைக்கிறார்களாம்.

நினைப்பில்தான் ஆண்கள் படு வேகம். செயல்பாட்டில் மந்தம்தானாம். வாரத்திற்கு 2 முறை அல்லது வருடத்திற்கு 104 முறைதான் தாங்கள் நினைப்பதை செயலில் காட்டுகிறார்களாம் ஆண்கள்.

செக்ஸில் ஈடுபடுவதை விட அதுகுறித்து நினைப்பதில்தான் ஆண்கள் அதிக நாட்டம் காட்டுவதாகவும் அந்த சர்வே கூறுகிறது.

ஆண்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு தாங்கள் எதிர்பார்த்த செக்ஸ் உறவு பூரணமாக கிடைப்பதாக திருப்தி தெரிவித்துள்ளனர்.

Story first published: Monday, February 8, 2010, 14:59 [IST]

Get Notifications from Tamil Indiansutras