35 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் நான்கில் ஒருவர் செக்ஸ் வாழ்க்கையை விரும்பவில்லை என்று பதிலளித்துள்ளனராம்.
இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்துக் கணிப்பை நடத்தியவர்களில் ஒருவரான கொலீன் நோலன் கூறுகையில்,
35 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 28 சதவீதம் பேர் காதல், காமம் என்பதெல்லாம் பழைய கதை என்று கூறினர்.
35 முதல் 64 வயதுக்குட்பட்ட 745 பெண்களிடம் சர்வே எடுக்கப்பட்டது. அதில் குழந்தைப் பேறு இல்லாத பெண்களிடம், குழந்தை பெற்ற பெண்களை விட ஆர்கசம் அதிகம் இருப்பதாக தெரிய வந்தது.
41 சதவீதம் பேர் அடிக்கடி தங்களுக்கு ஆர்கசம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.
ஒரு குழந்தை வைத்துள்ள தாய்மார்களில் 12 சதவீதம் பேர் மட்டுமே முழுமையான திருப்தியை செக்ஸ் மூலம் அடைந்ததாக கூறினர்.
2 குழந்தைகளுக்குத் தாயான பெண்களில் 14 சதவீதம் பேர் ஓரளவு திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கை இருப்பதாக தெரிவித்தனர்.
பகுதி நேரமாக வேலை பார்க்கும் பெண்களில் 67 சதவீதம் பேருக்கு அதிக அளவில் ஆர்கசம் வருவதாக தெரிவித்தனர். முழு நேர வேலையில் உள்ள பெண்களில் 57 சதவீதம் பேருக்கு ஆர்கசம் அடிக்கடி வருகிறதாம்.
மெனோபாஸ் பயம் பெண்களிடையே அதிக அளவில் உள்ளதாம். 42 சதவீதம் பெண்கள் இதை நினைத்து தங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக குறிப்பிட்டனர்.
நடுத்தர வயது முதல் முதிய வயதையொட்டிய பெண்களுக்கு பல்வேறு வகையான உடல் நலக் கோளாறுகள் காணப்படுகின்றன. இருப்பினும் இதை யாரிடமும் போய்ச் சொல்ல அவர்கள் விரும்புவதில்லை.
காரணம், தயக்கம்தான்.
அதேபோல 35 வயதைத் தாண்டி விட்ட பின்னர் செக்ஸ் வாழ்க்கையில் பெண்களுக்கு ஒருவித அலுப்பு வந்து விடுவதும் தெரிய வந்துள்ளது என்றார் நோலன்.