•  

சூப்பர் செக்ஸ்?: 'பன்றி பெஸ்ட்'!-சொல்கிறார் அர்ஜென்டினா பெண் அதிபர்

Cristina Fernandez
 
பியூனஸ் அயர்ஸ்: சிறந்த முறையிலான செக்ஸுக்கு வயாகராவைத் தேடிப் போவதை விட பன்றிக் கறி சாப்பிட்டாலே போதும் என்று கூறியுள்ளார் அர்ஜென்டினா நாட்டு பெண் அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ்.

அர்ஜென்டினாவில் பன்றிக் கறி ரொம்ப பாப்புலர். பன்றிக் கறியைச் சாப்பிடாதவர்களே கிடையாது என்று கூறும் அளவுக்கு அங்கு பன்றிக் கறி ரொம்பவே பிரபலம்.

இந்த நிலையில் பியூனஸ் அயர்ஸில் நடந்த நிகழ்ச்சியில் பன்றிக் கறி சாப்பிடுவோருக்கு குஷியூட்டும் தகவலைக் கூறினார் அதிபர் கிறிஸ்டினா.

அவர் பேசுகையில், வயாகராவை விட சக்தி வாய்ந்தது பன்றிக் கறி. இதை நான் எனது சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன் என்று கிறிஸ்டினா கூற, அர்ஜென்டினாவே கிளுகிளுப்பாகியுள்ளது.

கிறிஸ்டினா தொடர்ந்து பேசுகையில், எனக்கு பன்றிக் கறி சாப்பிட்டால் நமது செக்ஸ் செயல்பாடுகள் தூண்டுவிக்கப்படுவது முதலில் தெரியாமல்தான் இருந்தது. ஆனால் பின்னர்தான் அதை புரிந்து கொண்டேன்.

வயாகரா மாத்திரைய நாடுவதை விட வறுக்கப்பட்ட பன்றி இறைச்சி மிகவும் சிறந்த முறையில் நமது செக்ஸ் உணர்வுகளைத் தூண்டி விடும்.

எனது கணவர் நெஸ்டர் கிர்ச்னரும் நானும் பன்றிக் கறி சாப்பிட்ட பின்னர் சிறந்த முறையிலான செக்ஸ் உறவைக் கொள்ள முடிந்தது. இதை வைத்துதான் இவ்வாறு அடித்துச் சொல்கிறேன் என்றார் கிறிஸ்டினா.

அத்தோடு நில்லாமல் பன்றிக் கறித் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளையும் அவர் அறிவித்துள்ளார்.

உலகிலேயே பன்றிக் கறியை அதிகம் சாப்பிடும் மக்கள் அர்ஜென்டினா நாட்டினர் என்பது கூடுதல் தகவல்.

இவர்களுக்கு கோழிக் கறி உள்ளிட்ட பிற வகை இறைச்சிகள் பிடிக்காது. பன்றிக் கறிதான் இவர்களின் தேசிய உணவு என்று கூறும் அளவுக்கு பன்றிக் கறிக்கு அடிமையானவர்கள் அர்ஜென்டினா நாட்டவர்.

இத்தனைக்கும் தெற்கு அட்லான்டிக் மீன்வளப் பகுதியில் அர்ஜென்டினா இருந்தாலும் கூட கடல் உணவுகள் பக்கம் இவர்கள் எப்போதாவதுதான் திரும்பிப் பார்க்கிறார்கள்.

கிறிஸ்டினா சொல்வது குறித்து செக்ஸ் ஸ்பெலிஷ்ட்டான அமடோ பெச்சாரா என்பவர் கூறுகையில், பன்றிக் கறியால் செக்ஸ் செயல்பாடுகள் தூண்டுவிக்கப்படுது குறித்து இதுவரை எந்த நிரூபணமும் இல்லை என்றார்.

Story first published: Saturday, January 30, 2010, 15:15 [IST]

Get Notifications from Tamil Indiansutras