•  

80 வயதில்தான் செக்ஸ் ஆர்வம் அதிகரிக்கும் - ஆய்வு

வயதானால் 'எல்லாம்' முடிந்து விடும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு. இந்த எண்ணமே அவர்களது இயல்பான செக்ஸ் ஆர்வத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக மாறி விடுவதுண்டு.

ஆனால் 80 வயதில்தான் செக்ஸ் ஆசை அதிகரிக்கும் என்று அமெரிக்க ஆய்வு ஒன்று கூறுகிறது.

சிகாகோ பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் எட்வர்ட் வியூமான் தலைமையிலான குழு இதுகுறித்த ஆய்வு ஒன்றை நடத்தியது.

அதில், 57 முதல் 85 வயது வரை உள்ள ஆண், பெண் இருவரிடமும் எந்த வயதில் செக்ஸ் ஆசை அதிக அளவில் இருந்தது என்று கேட்கப்பட்டது.

இந்த ஆய்வில், 1,550 ஆண்களும், 1,755 பெண்களும் கலந்து கொண்டனர். அவர்களைத் தேடிப் போய் கருத்து கேட்கப்பட்டது.

கருத்துச் சொன்னவர்களில் 68 சதவீதம் ஆண்களும், 42 சதவீதம் பெண்களும் தாங்கள் தற்போதும் செக்ஸ் உறவில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

அதிலும் 80 முதல் 85 வயது வரைக்குட்பட்டவர்கள்தான் பெருமளவில் செக்ஸ் ஆர்வம் அதிகம் உள்ளவர்களாக இருக்கின்றனர் என்பதும் தெரிய வந்தது.

மேலும், 'அதை' வேண்டாம் என்று ஒதுக்கி வைத்திரு்நதவர்கள், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பிரச்சினைகளுடன் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. இவர்களிடையே, கணவன்- மனைவி உறவும் நெருக்கமாக இல்லாததும் தெரிய வந்தது.

செக்ஸ் உறவு வைத்து கொள்பவர்களில் 60 வயதினரைவிட 80 வயதினர் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிக ஆரோக்கியத்துடன் உள்ளனர் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

Story first published: Wednesday, November 11, 2009, 14:07 [IST]

Get Notifications from Tamil Indiansutras