•  

ஷோபியின் 'செக்ஸர்சைஸ்'

 
உடல் எடையைக் குறைக்க சாப்பாட்டைக் குறைப்பார்கள், கடுமையாக உடற்பயிற்சி செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மாரத்தான் செக்ஸ் வைத்துக் கொண்டு தனது எடையைக் குறைக்கப் போவதாக கிளுகிளுப்பாக கூறியிருக்கிறார் பிரிட்டன் டிவியில் பிக் பிரதர் ரியாலிட்டி ஷோவில் வெற்றி பெற்றுள்ள ஷோபி ரீட்.

20 வயதேயாகும் இளம் கிளாமர் புயல்தான் ஷோபி. பிக் பிரதர் நிகழ்ச்சியில் இவர் வெற்றி பெற்றுள்ளார். ஷில்பா ஷெட்டி வென்ற அதே பிக் பிரதர் நிகழ்ச்சிதான்.

பிக் பிரதர் நிகழ்ச்சிக்காக வீட்டுக்குள்ளேயே அடைபட்டு நிறைய சாப்பிட்டதால் குண்டக்க மண்டக்க எடை கூடி விட்டாராம் ஷோபி. ஆனால் இதைக் குறைக்க தன்னிடம் வழி உள்ளதாக கூறுகிறார் ஷோபி.

ஷோபி கூறும் அந்த வழி படு வித்தியாசமானது - கிளுகிளுப்பானது. தொடர்ந்து செக்ஸ் உறவில் ஈடுபட்டு உடல் எடையைக் குறைக்கப் போகிறாராம் ஷோபி.

ஷோபி கூறுகையில், தொடர்ந்து ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று தாறுமாறாக சாப்பிட்டு பெருத்துப் போய் விட்டேன். தற்போது நான் சைஸ் 10 க்கு போய் விட்டேன்.

நிறைய சாப்பிட்டேன். ஆனால் வேறு வழியில்லையே. இருந்தாலும் உடலைக் குறைக்க என்னிடம் எளிதான ஒரு வழி உள்ளது.

நிறைய செக்ஸ் வைத்துக் கொள்ளப் போகிறேன். அதற்குப் பிறகு பாருங்கள், தானாக உடல் குறைந்து போய் விடும் என்கிறார் படு கூலாக.

ஆனால் பிக் பிரதர் நிகழ்ச்சியில் இவருடன் பங்கேற்ற காதலர் கிறிஸ் டோன்னலியுடன் கண்டிப்பாக செக்ஸ் வைத்துக் கொள்ள மாட்டாராம்.

ஏனாம்..

அவன் அதற்கேற்ற ஆள் இல்லை. ரொம்ப சின்னப் பையனாக இருக்கிறான்...என்னோட சிஹுஹுவா நாய்க்குட்டி கூட கொஞ்சம் பெரிதாக இருக்கிறது... ஆனால்...(இதற்கு மேல் அவர் சொன்னதை எழுத முடியாத அளவுக்கு அது ஆ...)

பிரேசில் நாட்டைச் சேர்ந்த எனது நண்பன் ரோட்ரிகோ லோபஸைத்தான் செக்ஸர்சைஸுக்கு நான் தேர்வு செய்து வைத்துள்ளேன். எனது உடல் எடையைக் குறைக்க லோபஸ் பெரும் உதவியாக இருப்பார்.

எல்லோருக்கும் தப்பாக தெரிவது எனக்கு மட்டும் சரியாகவே தோன்றும். எப்பவுமே நான் அப்படித்தான் என்கிறார் ஷோபி.

Story first published: Wednesday, September 9, 2009, 15:28 [IST]

Get Notifications from Tamil Indiansutras