சில உணவுகள் உற்சாகத்தை அதிகரிக்கும்... சில உணவுகள் உற்சாகத்தை கட்டுப்படுத்தும்... எனவேதான் நேரத்திற்கு ஏற்ப சரியான உணவுகளை உண்ணவேண்டும் என்கின்றனர் முன்னோர்கள்.
தாம்பத்ய உறவிற்கு போவதற்கு முன்பு வெற்றிலை பாக்கு போடுவதும் கூட இதை மையப்படுத்திதான். என்ன மாதிரியான உணவுகள் உண்பதனால் தாம்பத்ய உறவில் தடங்கல் இன்றி ஈடுபடலாம் என்று பல கட்டுரைகளில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல படுக்கை அறைக்கு போகும் முன்பாக என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.
பெப்பர்மின்ட் சூவிங்கம்
சுவாச புத்துணர்ச்சிக்காக சிலர் சூவிங்கம் மெல்லுவார்கள். பெப்பர்மின்ட் சூவிங்கம் ஆகவே ஆகாது என்கின்றனர். இது செக்ஸ் ஹார்மோன் லெவலை கட்டுப்படுத்துமாம். புதினா உடலுக்கு நன்மை தரக்கூடியதுதான் என்றாலும் படுக்கைக்கு போகும் முன்பாக அதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர்
ஆல்கஹால்
ஜின், சோடா போன்ற பானங்களை தவிர்க்க வேண்டும். இது டெஸ்டோடிரன் ஹார்மோன் சுரப்பை குறைப்பதோடு விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்குமாம்.
ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்
கிரிஸ்பான ப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிட்டுவிட்டு கூல்டிரிங்க்ஸ் குடிப்பவரா நீங்கள்? அதை படுக்கைக்கு போகும் முன் தவித்து விடுங்கள். அதில் உள்ள கொழுப்புச் சத்து உங்கள் செக்ஸ் ஹார்மோன் லெவலை குறைத்துவிடுமாம்
டோஃபு
சோயா பாலில் இருந்து செய்யப்படும் டோஃபு உணவுகளை கண்டிப்பாக தவித்து விடுங்கள். சிலர் முட்டைக்குப் பதிலாக டோஃபு எடுத்துக் கொள்வார்கள். இரவு நேரத்தில் உறவுக்கு முன்பாக அதை தவிர்த்துவிடுங்கள். ஏனெனில் டோஃபு ஈஸ்ட்ரோஜென் லெவலை குறைத்துவிடும்.
டின் உணவுகள்
டின்களில் அடைத்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவுகளை கண்டிப்பாக தவித்து விடுங்கள். காரணம் அதில் உள்ள ரசாயனங்கள் உற்சாகத்தை குறைத்து விடுமாம்.
ஒயின்
ஒரு கப் ஒயின் சாப்பிட்டால் மூடு கிளம்பும் என்று கூறி அதை சாப்பிடுவார்கள். அது தவறானதாம். இதன் மூலம் தாம்பத்ய உறவில் தடுமாற்றம்தான் ஏற்படும் என்கிறது வாஷிங்டனில் நடைபெற்ற ஆய்வு ஒன்று.
ஓட்ஸ் உணவுகள்
இரவு நேரத்தில் ஓட்ஸ் சாப்பிட வேண்டாம். இது உடம்பில் கிளர்ச்சியை குறைத்து விடும். காரணம் இதில் உள்ள அதீத நார்ச்சத்துதானாம்.
உணவுக்கு பின் பழங்கள்
இரவு உணவுக்குப் பின்னர் ஸ்ட்ரா பெரி உள்ளிட்ட பழங்களை சாப்பிட வேண்டாம். இது உணவு ஜீரணிக்கும் தன்மையை பாதிக்குமாம். பழங்கள் சாப்பிட வேண்டுமானால் இரவு உணவுக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக எடுத்துக் கொள்ளலாம்.
உற்சாக பானங்கள்
இரவு படுக்கைக்குப் போகும் முன்பு உற்சாக பானம் அருந்துவதை தவிர்த்து விடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். அதில் உள்ள சர்க்கரை செக்ஸ் ஹார்மோன் அளவை குறைத்து கிளர்ச்சியை தடுத்து விடுமாம். எனவே மேற்கண்ட உணவுகளை தவிர்ப்பதன் மூலம் படுக்கைறையில் உற்சாகத்தை அதிகரிக்கலாம்.