உயர் ரத்த அழுத்தம் எனப்படும் ஹைபர் டென்சன் இன்றைய இளம் தலைமுறையினர் பலரையும் தாக்கிவருகிறது. இந்த நோயானது மவுனமாக இருந்து ஆளை கொள்ளும் ஆபத்தான நோய் என்று மருத்துவ உலகினர் எச்சரிக்கின்றனர்.
உயர் ரத்த அழுத்தத்தினால் பக்கவாதம், இதயபாதிப்பு, சிறுநீராக கோளாறுகளும் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் இது தாம்பத்ய வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கும் வேட்டு வைக்கும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
உயர் ரத்த அழுத்த நோயினார் உடலில் ரத்த ஓட்டம் சீராக பாய்வதில்லை. மேலும் உணர்வு நரம்புகளில் சரியான அளவில் ரத்தம் பாய்வது தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக தம்பதியரின் உறவில் பாதிப்பு ஏற்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
உயர்ரத்த நோயால் பாதிக்கப்பட்ட தம்பதியர்களை ஆராய்ந்த போது இதயநோய் பாதிப்போடு அவர்களுக்கு தாம்பத்ய உறவில் குறைபாடு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
எழுச்சி குறைபாடு
உறவின் போது உடல் முழுவதும் ஏற்படும் கிளர்ச்சியோடு உணர்வு மண்டலங்களில் பாயும் ரத்தம் உறுப்புகளை எழுச்சியடையச் செய்யும். ஆனால் ஹைபர் டென்சன் ஆண் உறுப்பின் எழுச்சி நிலையை மட்டுப்படுத்துகிறது. இந்த இயலாமை ஆண்களை மனரீதியான சிக்கலுக்கும் ஆளாக்குகிறது.
மருத்துவர்களின் ஆலோசனை
இதுபோன்ற குறைபாடு உடையவர்கள் மருத்துவர்களின் தகுந்த ஆலோசனை பெற்று உயர் ரத்த அழுத்த பிரச்சினையை தீர்க்கும் மருந்துகளை உட்கொள்ளலாம். நீங்களாக மருந்துகளை எடுத்துக்கொள்வது தேவையற்ற பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரிக்கின்றனர்.
ஹைபர் டென்சனை போக்கும் செக்ஸ்
ஹைபர் டென்சன் காரணமாக செக்ஸ் வாழ்வில் பிரச்சினை ஏற்படுகிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், சரியான உறவில் ஈடுபடுபவர்களுக்கு மனஅழுத்தம், ஹைபர் டென்சன் ஏற்பட வாய்ப்பே இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.
உடற்பயிற்சி அவசியம்
மாறிவரும் உணவுப்பழக்கம் உயர்ரத்த அழுத்த பிரச்சினையை ஏற்படுத்துகிறது. எனவே ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். புகை, மது பழக்கத்தை கைவிடவேண்டும். உணவில் உப்பை குறைத்துக் கொள்வது அவசியம். தினசரி 45 நிமிடம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீரடையும்.
பூண்டு சாப்பிடுங்களேன்
உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் பூண்டு ஜூஸ் பருகலாம். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைவதோடு உயர்ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
அதேபோல் தினசரி காலையில் நெல்லிக்கனி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து ஜூஸாக கலந்து குடிக்கலாம்.
தர்பூசணி கசகசா சாறு
தினசரி தர்பூசணி பழத்தை சாப்பிடலாம் அல்லது தர்பூசணி பழச் சாறுடன் கசகசா சேர்த்து அரைத்து தினசரி வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதனால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.
பாரம்பரிய உணவுகள்
சத்தான உணவுகள் உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்திருக்கும். இட்லி, கம்பு, ராகிக் களி, சோள மாவு தோசை, கீரை கலந்து செய்யப்படும் அடை வகைகள் என மூன்று வேளை உணவிலும் பாரம்பரிய உணவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
அதோடு பச்சைப்பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட பயறு வகைகளை கலவையாக முளைக் கட்டி சாலடாக சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான புரோட்டீன் கிடைக்கிறது. உயர் ரத்த அழுத்தம் கொஞ்சம் கூட எட்டிப்பார்க்காது. உறவிலும் உற்சாகமாக ஈடுபடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.