ஆண்களுக்கு உள்ள செக்ஸ் பிரச்சினைகளில் முக்கியமானது உறுப்பு எழுச்சிக் குறைபாடு. இந்தப் பிரச்சினை நிறையப் பேருக்கு உள்ளது. இப்படிப்பட்டவர்களுக்கு செக்ஸில் இயல்பாக ஈடுபட முடியாது என்பது போக இப்போது புதிதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளனர் ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள்.
அதாவது எழுச்சி குறைபாடு உள்ளவர்களுக்கு இதய நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருக்கிறதாம். மேலும் இவர்களுக்கு வாழ்நாளும் குறைவாகவே இருக்குமாம். ஆஸ்திரேலியாவி்ன் சாக்ஸ் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட 95,000 ஆண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு அதன் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளர் எமிலி பேங்க்ஸ் கூறுகையில், உறுப்பு எழுச்சிக் குறைபாடு உள்ளவர்களை இதய நோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது. மேலும் சீக்கிரமே அவர்கள் மரணத்தைத் தழுவும் வாய்ப்பும் உள்ளது.
இவர்களுக்கு இதய நோய் திடீரென வந்து தாக்கும். அதற்கான எந்தவிதமான முன் அறிகுறிகளும் இவர்களுக்குத் தெரியாது. அதுதான் அதிர்ச்சித் தகவலாக உள்ளது. இருப்பினும் உறுப்பு எழுச்சிக் குறைபாட்டைப் போக்க சரியான சிகிச்சை முறைகளை எடுத்துக் கொண்டால் இந்தப் பிரச்சினையையும் சமாளிக்க முடியும்.
40 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களில் ஐந்தில் ஒருவருக்கு இந்த உறுப்பு எழுச்சிக் குறைபாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்றார் எமிலி.
ஆண்களே கவனமா இருங்க...!