முன்பெல்லாம் வீட்டு வேலைகளை பெண்கள் மட்டுமே செய்து வந்தனர். ஆணாதிக்க உலகம் என்பதால் இப்படி பெண்களை பிரித்து வைத்து விட்டனர். ஆனால் இன்று அப்படி இல்லை. ஆண்களை விட உயர்ந்த நிலைக்குப் பெண்கள் போய் விட்டனர். நானும் சம்பாதிக்கிறேன், நீயும் சம்பாதிக்கிறே. நான் துணி துவைச்சா நீ அயர்ன் பண்ணு. நான் சமைச்சா, நீ பாத்திரத்தைக் கழுவு என்று பிரித்துக் கொண்டு இருவரும் சுமைகளை இலகுவாக்கிக் கொண்டுள்ளனர்.
ஆனால் காலம் காலமாக பெண்கள் செய்து வரும் வேலைகளை செய்யும் அதிக அளவில் செய்யும் ஆண்களுக்கு, செக்ஸ் ஆர்வம் குறைந்து போய் அவர்கள் செயலிழந்த நிலைக்குப் போய் ( அதாவது டயர்டு ஆகி) விடுகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது ஒரு ஆய்வு.
அதேசமயம், இந்த வேலைளை குறைந்த அளவில் செய்யும் ஆண்கள் அதிக அளவில் செக்ஸில் ஈடுபடுகிறார்களாம். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சோஷியோலாஜிஸ்டுகள் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4500 பேரிடம் ஆய்வு
அமெரிக்க அளவில் இந்தஆய்வை நடத்தியுள்ளனர். மொத்தம் 4500 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அனைவரும் திருமணமானவர்கள். இந்த ஆய்வின்படி, சராசரியாக 46 வயது கொண்ட கணவர்களும், 44 வயது கொண்ட மனைவியயரும், சராசரியாக வாரத்திற்கு 34 மணி நேரம் பெண்கள் பார்க்கும் வேலைளை இணைந்து செய்கின்றனர். மேலும் ஆண்கள் பார்க்கும் வேலையாக இருப்பவற்றை அவர்களுடன் பெண்களும் இணைந்து செய்கின்றனர். இது வாரத்திற்கு 17 மணி நேரமாக உள்ளது.
பெண்களுக்கு திருப்தி குறையவில்லை
பெண்கள் பார்க்கும் வேலைகளை கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு கணவர்கள் செய்கின்றனர். பெண்கள் பார்க்கும் வேலைகளை அதிகளவில் பார்க்கும் ஆண்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறைவதாக இருந்தாலும் கூட பெண்களுக்கு செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி குறையவில்லையாம். அந்த அளவு அப்படியேதான் பாதிக்கப்படாமல் இருக்குமாம்.
வெளி வேலைகள் அதிகம்
வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது... மனைவியர் பெரும்பாலும் சமையல் செய்வது, வீட்டைச் சுத்தம் செய்வது, ஷாப்பிங், துணி துவைப்பது போன்றவற்றை காலம் காலமாக செய்து வருகின்றனர். அதேசமயம், ஆண்கள் பில் கட்டுவது, வீட்டுக்குத் தேவையானதை வாங்கி வருவது உள்ளிட்ட வெளி வேலைகளை அதிகம் செய்கின்றனர்.
ஆர்வம் குறைய காரணம்
இதில் மாற்றம் ஏற்பட்டு வீட்டுவேலைகளை ஆண்கள் அதிகம் பார்க்கும் போது அவர்களுக்கு செக்ஸில் ஆர்வம் குறைந்து போய் விடுகிறதாம். வழக்கமான வேலையிலிருந்து புதிய வேலைக்கு மாறுவதால் இந்த விளைவு ஏற்படுகிறதாம். புதிய வேலைக்கு மாறுவதால் அவர்களின் செக்ஸ் நடவடிக்கைகளிலும் குழப்பமாகி அது ஆர்வத்தைக் காலி செய்து விடுவதாக கூறுகிறது இந்த ஆய்வு.
பிரித்து வேலை பாருங்களேன்
அதற்காக ஆண்கள் சமைக்கக் கூடாது, துணி துவைக்கக் கூடாது, அயர்ன் பண்ணக் கூடாது, ஷாப்பிங் போகக் கூடாது என்று கூற முடியாது.மாறாக இதுபோன்ற வேலைகளை முழுமையாக செய்யாமல் பிரித்து வைத்துக் கொண்டு செய்யலாம். அல்லது குறைவாகச் செய்யலாம். அதற்கு கணவரும், மனைவியும் இணைந்து புரிந்து பேசி வேலைகளைப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று இந்த ஆய்வு அறிவுறுத்துகிறது.
இருவரும் சம்பாதித்தாலும் பாதிப்பில்லை
அதேபோல ஒரு வீட்டில் கணவரும், மனைவியும் சம்பாதிப்பவர்களாக இருந்தால் அது செக்ஸ் வாழ்க்கையை பெரிய அளவில் பாதிக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. 30-40 வருடத்திற்கு முந்தைய குடும்பச் சூழல் இப்போது இல்லை.இருப்பினும் செக்ஸ், வீட்டு வேலைகள் போன்றவை இன்னும் வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களாகவே உள்ளன. அதில் பெரிய அளவில் மாற்றம் வந்து விடவில்லை என்று கூறினார் இந்த ஆய்வில் ஈடுபட்ட குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் ஒருவரான காத்ரீனா லூப்.
விருந்து கிடைக்குமாம்!
அதேசமயம், இன்னொரு ஆய்வு என்ன சொல்கிறது என்றால், வீட்டு வேலை செஞ்சா இன்னிக்கு விருந்து தருகிறேன் என்று கூறி பல பெண்கள், கணவர்களிடம் நிறைய வீட்டு வேலைகளைச் செய்து வாங்கிக் கொள்கிறார்களாம். இப்படிப்பட்ட ஆண்களுக்கு நிறைய செக்ஸ் கிடைக்கிறதாம். ஆனால் அவர்களிடம் என்ன மாதிரியான வேலைகளைப் பெண்கள் கொடுக்கிறார்கள் என்பது குறித்து அந்த ஆய்வில் தெரிவிக்கப்படவில்லை.