முத்தம் என்பது அமைதியாக வெளிப்படுத்தக் கூடிய காதலாகும். ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பையும், அதன் ஆழத்தையும் அறியமுத்தம் ஒரு வழியாகும்.
முத்தம் தர ஏற்ற இடம் முகத்திலே எந்த இடம் என்று கூட காதலன் தன் காதலியிடம் கேட்பதுண்டு.
பல்வேறு வழிகளில் முத்தம் தரலாம்.. ஒவ்வொரு வகை முத்தமும் ஒருவகை தித்திப்பாகும்.
முத்தம் தருவதும் ஒரு கலையாகும்.அதில் தேறுவோர் காதல் கலையிலும் வல்லவர்களாக மாறலாம். முகத்தில் மட்டுமல்ல உடலின் பல பகுதிகளில் கொடுக்கப்படும் முத்தம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.
கழுத்தில் கொடுக்கப்படும் முத்தத்திற்கு தனி சிறப்புண்டு. குறிப்பாக பெண்களின் கழுத்தில் கொடுக்கப்படும் முத்தமானது அவர்களை தூண்டுவிக்க உதவுமாம். அப்படி முத்தமிடும்போது முனுமுனுத்தபடி முத்தம் தரும்போது மேலும் இன்பம் கூடுமாம்.
விரல்களில் முத்தம்
கை விரல்களிலும் முத்தமிட்டு நெளிய வைக்கலாம். மெதுவாக உதடுகளால் வருடிக் கொடுத்தபடி செல்லமாக முத்தமிடும்போது உணர்வுகள் உதடுகளிலிருந்து விரல்களுக்கு ஷிப்ட் ஆகி உள்ளத்தைத் தொடுமாம்.
நெற்றியில்
நெற்றியில் அன்போடும், பாசத்தோடும் இடப்படும் முத்தமானது, நாம் நமது காதலர் மீது வைத்துள்ள பாசத்தை வெளிப்படுத்துமாம்.
தோள்பட்டையிலும் தரலாமே
அதேபோல தோள்பட்டையிலும் கூட முத்தம் தரலாம். காதலியின் தோள்பட்டையை பின்னால் போய் நின்று அருகே அணைத்தபடி மென்மையாக முத்தமிட வேண்டும். உருகிப் போவாராம் காதலி.
மடி மீது ஒரு பிடி முத்தம்
உங்கள் துணையின் தலையை உங்கள் மடி மீது சாய்த்து வையுங்கள். பின்னர் கீழே குணிந்து அவரின் இதழ்களைக் கவ்வி முத்தமிடுங்கள். கீழ் உதடு, மேல் உதடு என குழைந்து கொடுங்கள்.
காது மடலில் ஒரு கவி முத்தம்
காது மடல்களைப் போல சென்சிட்டிவ்வான பகுதி வேறு இல்லை. காது மடல்களில் வருடியபடியும், நாவுகளால் தழுவியபடியும் தரப்படும் முத்தத்திற்கு தனி மவுசு உண்டு.
கடித்தும் கொடுக்கலாம்
உங்களது துணையின் உதடுகளை லேசாக பற்களால் கடித்து இழுத்தும் முத்தம் தரலாம். வலிக்காமல் கடிப்பது அவசியம்.
கீழுதட்டை அழுந்தக் கடியுங்கள்
மிகவும் மயக்கம் தரக்கூடிய முத்தம்இது. துணையின் கீழ்உதட்டை அழுத்தமாக கடித்துக் கொடுக்கலாம்இ ந்த முத்தத்தை.
பிரெஞ்சு கிஸ்
பெயரிலேயே விஷயம் இருக்கிறது. எல்லோருக்கும் பிடித்த முத்தம் இது. மிகவும் ரொமான்டிக்கான முத்தமும் கூட.