•  

உறவில் உற்சாகம் தரும் முன் விளையாட்டுக்கள்...

படுக்கை அறையில் தம்பதியரிடையே நிகழும் சின்னச் சின்ன சந்தோசங்கள்தான் உறவின்போது உற்சாகத்தை அதிகரிக்கும். மகிழ்ச்சியான உறவிற்கு என்னென்ன செய்யலாம் என்று புத்தகம் படித்தோ, யாரிடமாவது கேட்டுத்தெரிந்து கொள்வதை விட தட்டுத் தடுமாறி கற்றுக்கொள்வதில்தான் த்ரில் இருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.விளையாட்டாய் வேடிக்கையாய் செய்யும் செயல்கள் உற்சாகத்தை தருமாம். சரியான தொடக்கம் உறவிற்கான மகிழ்ச்சியை அதிகரிக்குமாம். உறவின் போதான முன்விளையாட்டுக்கள் தம்பதியரிடையேயான அன்பையும் பிணைப்பையும் அதிகரிக்கிறதாம்.ஆழமான பார்வை... அன்பான ஒரு அணைப்பு... சின்னதாய் ஒரு முத்தம் என தொடங்குங்கள். மெதுவாய் தொடங்கி ஆர்வமாய் விளையாடும் விளையாட்டுக்கள் பற்றி பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.விரல் விளையாட்டு

விரல் விளையாட்டு

ஒவ்வொரு விரலின் நுனியிலும் ஹை வோல்டேஜ் மின்சாரம் உள்ளது என்பார்கள். அதுவும் படுக்கை அறையில் மசாஜ் என்ற பெயரில் விளையாடும் விளையாட்டு உற்சாகத்தினை தூண்டிவிடுமாம்.

கண்ணா மூச்சி விளையாட்டு

கண்ணா மூச்சி விளையாட்டு

உங்களின் துணையின் கண்களை கட்டிவிடுங்கள் அப்புறம் விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டு உணர்வுகளை கிளறிவிடுமாம்.

மனம் மயக்கும் பூக்கள்

மனம் மயக்கும் பூக்கள்

உங்கள் இருவருக்கும் பிடித்த பூக்களை உடம்பில் ஆங்காங்கே தூவிவிட்டு உற்சாகத்தை அதிகப்படுத்துங்கள். மென்மையான பூக்கள் உணர்வின் மொட்டுக்களை மலரச்செய்யுமாம்.

சில்லென்ற ஐஸ்கட்டி

சில்லென்ற ஐஸ்கட்டி

கோடை காலம் என்பதால் பனிக்கட்டி விளையாட்டு அதீத உற்சாகத்தை தருமாம். ஃப்ரிட்ஜ்ஜில் உள்ள சின்னச் சின்ன பனிக்கட்டிகளை எடுத்து வைத்துக் கொண்டு சர்ப்ரைசாக உங்கள் துணையின் உடலில் ஆங்காங்கே தொடுங்களேன். உற்சாக கூச்சலிடுவாராம் உங்களவர். காய்ச்சல் வராமல் பார்த்துக்கொள்வது உங்கள் பொறுப்பு.

கவர்ச்சியான உடைகள்

கவர்ச்சியான உடைகள்

படுக்கை அறையில் அதுவும் அதுமாதிரியான சந்தர்ப்பத்தில் இழுத்துப் போர்த்திக்கொண்டு இருப்பதை விட கொஞ்சம் கவர்ச்சியான உடை அணியுங்களேன். அது உங்களவரின் மூளையில் உற்சாக ரசாயனத்தை சுரக்கச் செய்யுமாம்.

பழங்கள் செய்யும் மாயம்

பழங்கள் செய்யும் மாயம்

படுக்கை அறையில் பழங்களுக்கு என்னவேலை என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். திராட்சைப் பழங்களை வைத்து விளையாடும் முன் விளையாட்டுக்கள் கிளர்ச்சியை ஏற்படுத்துமாம்.

மென்மையான இறகு

மென்மையான இறகு

முன்பெல்லாம் வீடுகளில் பறவையின் இறகு, கோழி இறகு போன்றவைகளை கண்டிப்பாக வைத்திருப்பார்கள். இப்போது அழகிற்காக பறவையின் இறகுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த இறகினை வைத்து உங்கள் துணையின் உடலில் கோலம் போடுங்களேன். சும்மா உற்சாகம் ஊற்றெடுக்கும் என்கின்றனர்.

ஜூஸ் குடிக்கறீங்களா?

ஜூஸ் குடிக்கறீங்களா?

படுக்கை அறையில் பால் கொண்டுபோவது சகஜம்தான் ஒரு மாற்றத்திற்கு ஜூஸ் எடுத்துப் போங்களேன். அதுவும் ஒரு கப்பில் இரண்டு ஸ்ட்ரா போட்டுக் குடிப்பது கொஞ்சம் பழைய ஐடியாதான் ஆனால் அதிகம் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிறதாம்.

சில்லென்ற குளியல்

சில்லென்ற குளியல்

அதிகம் டயர்டாகிவிட்டால் இருவரும் சேர்ந்து ஷவரில் சில்லென்று ஒரு குளியல் போடுங்களேன். அந்த கிளுகிளுப்பே அடுத்த ஆட்டத்திற்கு தயார் படுத்துவிடுமாம்.

ஓடிப் பிடிச்சு விளையாடுங்களேன்

ஓடிப் பிடிச்சு விளையாடுங்களேன்

தினமும் ஒரே மாதிரி விளையாட்டு போரடிக்கும்தான் ஒரு மாற்றத்திற்கு ஓடிப்பிடித்து விளையாடுங்களேன். களைப்படையும் வரை விளையாடுவது மட்டுமல்ல முடிந்தால் உங்கள் துணையை தூக்கிக் கொண்டு வந்து படுக்கையில் போடுங்கள் அப்புறம் உங்களுக்கு அவர் டோட்டல் சரண்டர்தான்.

 English summary
Sex can be tantalising, no question about that! But what about focusing on the foreplay instead for a change? Let's find out what can drive your man crazy even before 'it' has started!
Story first published: Tuesday, April 9, 2013, 16:04 [IST]
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more