•  

காமத்திற்கு ஏது இலக்கணம்?

சென்னை: உன் கதகதப்பான மூச்சுக்காற்று
உன் பேச்சின் வழியாக என் மீது பட்டு
உயிரை உருக்கியது
உன் உதடு வழியாக வழிந்து வரும் வார்த்தைகள் என் செவியைத் தொட்டபோது நெஞ்சுக்குள் நூறு கோடி இன்பம்.

வார்த்தைகளைப் பிரசவிக்கும் உன் உதடுகளை மெல்லப் பிடித்து பிடித்து உரசி எடுத்து கவ்விக் கடித்து கைகளை இறுக்கி, நெஞ்சோடு நெஞ்சு சேர்த்து நின்றபடியே நீண்ட நேரம் உன்னுள் இறங்க வேண்டும்.

காதலியின் மோகத்தில் துடிக்கும் காதலனுக்கு அவள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்தால் எப்படி இருக்கும்.. இப்படித்தான் இருக்கும்.

காதலும் காமமும்

காதலும் காமமும்

உடலெங்கும் வெடித்துக் கிளம்பும் காமமும், அனுவெங்கும் தகர்த்து கிளம்பும் காதலும் இணையும்போது அந்த இடமே ஒரு காமலோகமாக மாறி அம்புகள் மாறி மாறித் தைத்து மன்மத ஆட்டத்திற்கு அளவே இல்லாமல்தானே போகும்.

எல்லாம் இன்ப மயம்

எல்லாம் இன்ப மயம்

உள்ளுக்குள் உன் ஆவியோடு கட்டுண்டு கிடக்க வேண்டும்.. காமுற்ற நெஞ்சம் வெட்கம் அகற்றி, புட்டத்தைப் பிடித்து நெருக்கி அணைத்து, விடாமல் விளையாட வேண்டும்... காதல் முற்றும்போது காமமாகிறது.. காமம் முற்றும்போது காதல் வலுவாகிறது.. இரண்டும் இணையும்போது கிடைக்கும் இன்பத்திற்கு அடியும் கிடையாது.. முடியும் கிடையாது.

எல்லாம் சொர்க்கம்

எல்லாம் சொர்க்கம்

நெற்றி தொடங்கி கண், மூக்கு, காது, வாய், இதழ்கள், கழுத்து, நெஞ்சு, மார்பு, வயிறு, இடுப்பு, தொப்புள் தொட்டு... தொடையில் இறங்கி, நடுவில் முயங்கி .. என் முகம் புதைத்து.. சொர்க்கமடி நீ... உண்மைதான்.. அவள் குரல் கேட்கும் ஒவ்வொரு நொடியும் அவனுக்கு சொர்க்கம்தான். இன்பத்தின் சுந்தரி அவள்.. இவன் மனதின் தேவதை அவள்.

கொஞ்சும் விளையாட்டு

கொஞ்சும் விளையாட்டு

சொக்க வைக்கும் அந்த சுந்தரக் குரல் கேட்கும்போதெல்லாம் சொக்கி நிற்கும் இவனுக்குள் காதல் இன்னும் இன்னும் ஊற்றெடுப்பதை அவள் எப்படி அறிவாள்.. அறியும் தருவாயில் அவன் எப்படி வெளிப்படுத்துவான்.. இப்படித்தான் கொஞ்சி விளையாடுவான் மஞ்சம் சோர்வுறும் வரை.

காதலை விட காமம் சிறந்தது

காதலை விட காமம் சிறந்தது

காதல் விளையாட்டுக்களுக்கு எப்போதுமே தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை. ஆரம்பித்தது முதல் முடியும் வரை இடைவெளியில்லாமல், சுற்றுச்சூழல் பிரக்ஞை இல்லாமல் பின்னிப் பிணைந்திருக்கும் மனங்கள். காதலை விட காமம் சிறந்தது.. காரணம் அது பாரபட்சம் பார்க்காதது. இருவருக்கும் முழுமையான இன்பத்தை மட்டுமே அது தரும். அதில் கலப்படம் இருக்காது. அனுபவித்துப் பாருங்கள்.

 

English summary
Love and lust cannot be separted each other. Lust is also the best way to express your Love.
Story first published: Wednesday, June 7, 2017, 12:16 [IST]

Get Notifications from Tamil Indiansutras