•  

டயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….

பணம் சம்பாதிக்கும் ஆசையினால் ஓடிக்கொண்டே இருக்கும் இளைய தலைமுறையினர் தங்களின் சந்தோசமான தாம்பத்ய வாழ்க்கையினை இழந்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வேளைப்பளுதான் மகிழ்ச்சிக்கு வேட்டு வைக்கும் முக்கிய அம்சம் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.இதில் அதிகம் பாதிக்கப்படுவது 30 முதல் 40 வயதிற்குட்பட்ட தம்பதியர்தான் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். திருமணமான புதிதில் சுவாரஸ்யமாக தொடங்கும் தாம்பத்ய வாழ்க்கை நாளடைவில் போர் அடிக்க ஆரம்பித்துவிடும். ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.சமீபத்தில் ஆண்-பெண் இருவரில் யாருக்கு செக்ஸ் ஆர்வம் அதிகம்?' என்று ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்கும் காரணிகள் பற்றியும், எந்தெந்த வயதில் என்ன மாதிரியான உணர்வுகள் ஏற்படும் என்பது பற்றியும் பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள், படியுங்களேன்.செக்ஸ் ஆர்வம்

செக்ஸ் ஆர்வம்

30 வயது முதல் 50 வயது வரை உடைய ஆண் பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 30 வயதுப் பெண்களில் 85 சதவீதம் பேரிடம் செக்ஸ் ஆர்வம் அதிகமிருப்பதாக தெரியவந்தது. இந்த வயதுடைய ஆண்களில் 75 சதவீதம் பேர்தான் இந்த ஆர்வப் பட்டியலில் இருக்கிறார்கள்.

பாதிக்கும் வேளைப்பளு

பாதிக்கும் வேளைப்பளு

கணவரும் நீண்ட நேரம் பணியில் ஈடுபடுவதோடு அவரின் நீண்ட நேர பயணம், பணிச்சூழலின் மனஅழுத்தம், பணக்கவலை எல்லாம் தங்களின் செக்ஸ் வாழ்க்கையை முழுங்கி வருகிறது' என்று கணக்கெடுப்பில் பெண்கள் தெரிவித்துள்ளனர்.

மாதம் ஒருமுறை

மாதம் ஒருமுறை

தாம்பத்ய உறவில் அதிக ஆர்வம் இருந்தாலும் அதிக வேளைப்பளுவினால் சோர்வடைந்து விடுவதாகவும் மாதம் ஒரு முறைதான் கணவருடன் உறவு வைத்துக் கொள்ள முடிகிறது என்றும் பெண்கள் கூறியுள்ளனர்.

பெண்களுக்கு அதிகம்

பெண்களுக்கு அதிகம்

30 வயதில் இருந்து 40 வயது வரை பெண்களின் செக்ஸ் ஆசைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது என்கிறார் இந்த ஆய்வு பற்றி கருத்து கூறிய டாக்டர் ஷா.

ஆண்களுக்கு குறைவு

ஆண்களுக்கு குறைவு

அதற்கு நேர் எதிராக ஆண்களின் செக்ஸ் ஆசைகள் குறைந்து கொண்டே போகிறது. அதுதான் பெண்களின் வேதனைக்கு காரணம்' என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பணமே பிரதானம்

பணமே பிரதானம்

இந்த ஆர்வத்துக்கு இப்போது வேட்டு வைத்துக்கொண்டிருப்பதே ஆண்-பெண் இருபாலரின் சம்பாதிக்கும் ஆசை தான். இந்த 30-40 வயதுப் பருவம் வாழ்க்கைக்கு அடிப்படையான வருவாயைத் திரட்டும் பருவமாக இருப்பதால் தம்பதியினர் கூடுதல் நேரம் வேலை செய்து வருவாய் ஈட்டவே விரும்புகிறார்கள்.

ஆர்வம் குறைகிறது

ஆர்வம் குறைகிறது

பெற்ற குழந்தை போதுமென்றும், உறவை குறைத்துக் கொள்வது நல்லது என்றும் கூட்டாக முடிவு செய்கிறார்கள். இந்த கூடுதல் வேலைப்பளுவால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் செக்ஸில் ஆர்வம் குறைந்து விடுகிறது.

குடும்ப பொறுப்பு

குடும்ப பொறுப்பு

30 வயதில் பெண்களுக்கு தாம்பத்ய திருப்தி அதிகம் ஏற்படுகிறது. அதிகமாக ஆர்வமும் காட்டுவார்கள். ஆனால் இந்த வயது ஆண்களுக்கு பொறுப்புணர்ச்சி மிகுந்து விடுகிறது. குடும்பம், குழந்தை, நிரந்தர வருவாய், அந்தஸ்து என நிர்ப்பந்தமான வாழ்க்கைப் போராட்டத்தால் கவலைகள் அதிகரிக்கிறது. அதனால் 30 வயது ஆண்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறையத் தொடங்குகிறது.

செக்ஸ் ஹார்மோன்கள்

செக்ஸ் ஹார்மோன்கள்

40 வயதில் பெண்களுக்கு ஹார்மோன்கள் சுரப்பது குறையத் தொடங்குகிறது. ஆனாலும் செக்ஸ் உணர்வுகள் மறுபடியும் மேலெழ ஆரம்பிக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை, உறுதியான வருவாய் இல்லாத நிலை போன்றவை பெரும்பாலான பெண்களின் உறவு உணர்வுகளை ஒதுக்கச் செய்கிறது.

வளர்ந்த குழந்தைகள்

வளர்ந்த குழந்தைகள்

இளம் வயதில் ஓடி ஆடி திரிந்த பெண்கள் 40 வயதில் அதிக செக்ஸ் ஆர்வத்துக்கு உள்ளாகிறார்கள். ஆனால் கணவர் இந்த உணர்வுகளை புரிந்து கொள்வதில்லை' என்று பெரும்பாலான பெண்கள் கூறியுள்ளனர்.

உடல் நல பாதிப்பு

உடல் நல பாதிப்பு

இதே வயதில் ஆண்கள் பலர் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் செட்டில் ஆகிவிடுகிறார்கள். எனினும் செக்ஸ் உணர்வுகளில் கொஞ்சம் ஆர்வம் குறைந்தவர்களாக இருக்கிறார்கள். காரணம் 40 வயதில் ஆண்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த வயதில் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய் பாதிப்புகளின் தாக்கம் வெளிப்படத் தொடங்குகிறது. எனவே விரைப்புத் தன்மையில் தளர்வு ஏற்படுவதால் அவர்களுக்கும் செக்ஸ் ஆர்வம் குறைகிறது.

மெனோபாஸ் பருவம்

மெனோபாஸ் பருவம்

50 வயதில் பெண்கள் மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் கட்டத்தை அடைகிறார்கள். அதனுடன் போராடத் தொடங்குவதால் செக்ஸ் ஆர்வத்தை கெடுக்கிறது இந்தப் பருவம்.

இதில் நீங்கள் எந்த வயதில் இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்குத் தக்கபடி உங்கள் தாம்பத்ய ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

 

 

English summary
It's very common for women to blame themselves when a partner appears to lose interest in sex. You may feel that there's something wrong with your lovemaking technique or that he just doesn't fancy you any more. This is often not the case, usually there is something going on upstairs that's freezing activities downstairs, your job is to find out what that something is, and work together to sort it out
Story first published: Tuesday, November 19, 2013, 14:34 [IST]
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras