இது தொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்பு ஒன்றில் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட திருமணமான பெண்கள் கணவருடன் செக்ஸ் உறவு திருப்தியில்லாமல் இருப்பதாக கூறியுள்ளனர். வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் மூன்றில் இரண்டுபேர் தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தியில்லாமல் இருக்கின்றனர். தென்கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பிரிட்டன் மக்கள் தங்கள் துணையுடனான செக்ஸ் உறவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக தெற்கு மிட்லேண்ட் பகுதியைச் சேர்ந்த மக்கள் செக்ஸ் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் பிரிட்டனைச் சேர்ந்த 70 சதவிகிதம் ஆண்கள் தங்களின் செக்ஸ் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தொலைத்து நிற்கின்றனர். வெளித்தோற்றத்திற்கு பகட்டாக உடையணிந்து திரிந்தாலும் பெரும்பாலான தம்பதிகள் உள்ளூர மகிழ்ச்சியின்றி இருப்பதற்குக் காரணம் அவர்களின் திருப்தியற்ற செக்ஸ் வாழ்க்கைதான் என்கிறது இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட இல்லிசிட் என்கவுண்டர்ஸ் டாட் காம் என்ற இணையதளம்.
இது மிகவும் ஆபத்தான விசயம் என்று கூறியுள்ள ஆய்வாளர்கள் குடும்ப வாழ்க்கையை சிதைத்துவிடும் அபாயம் உள்ளது என்கின்றனர்.