இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள கின்செ இன்டிடியூட் மற்றும் இன்டியானா பல்கலைக்கழகமும் இணைந்து இது தொடர்பாக சர்வே ஒன்றை நடத்தியது. இதில் அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் போன்ற நாடுகளைச் சேர்ந்த திருமணமாகி ஒன்று முதல் 51 வருடங்கள் வரை ஆன ஆயிரம் தம்பதிகள் பங்கேற்றனர். ஆய்வாளர்கள் பல்வேறு கேள்விகளை இந்த தம்பதிகள் முன்வைத்தனர்.
பெரும்பாலான ஆண்கள் தங்களின் மனைவி அல்லது காதலிகளை முத்தமிடவும், கட்டி அணைக்கவும் விரும்புவதாக கூறியுள்ளனர். இதிலேயே மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளனர். அதேசமயம் அதிகமாக அன்பு ஏற்படும் சமயங்களில் உறவில் ஈடுபட விரும்புவதாக பெண்கள் கூறியுள்ளனர்.
தாம்பாத்ய உறவு என்பது தம்பதியரின் அந்நியோன்னியத்தை அதிகரிக்கும், உறவுப் பிணைப்பை வலுவாக்கும் என்று என்று பெரும்பாலான தம்பதியர் தெரிவித்துள்ளனர்.
திருமணமான முதல் 15 வருடங்களில் குழந்தைகளை வளர்ப்பது பற்றிய உணர்வுச்சிக்கலில் பெண்கள் இருப்பார்கள். பின்னர் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் அவர்களுக்கு அந்த அழுத்தம் குறைந்து விடும். இதன் பின்னர் கணவருடனான அரவணைப்புக்கும், உறவில் ஈடுபடவும் பெண்கள் விரும்புகின்றனர் என்று ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் ஜூலியா ஹெய்மென் தெரிவித்துள்ளார்.
பெண்கள் நடுத்தர வயதிற்கு மேல்தான் அதிகம் உறவில் ?டுபட விரும்புகின்றனர் என்கிறார் ஹெய்மென், அப்போதுதான் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் இல்லாமல் இருக்கும். டென்சனும் குறைவாக இருக்குமாம்.
அதேசமயம் பெரும்பாலான ஆண்கள் அன்பான அரவணைப்பை பெரிதும் விரும்புவதாக கூறியுள்ளனர். அணைப்பு, முத்தம் ஆகியவற்றின் மூலமே திருப்தியடைவதாகவும் ஆண்கள் கூறியுள்ளனர் என்கின்றனர் ஆய்வாளர்கள்.