கனடா நாட்டை சேர்ந்த டொரண்டோ பல்கலையில் நடத்தப்பட்ட ஆய்வில் எப்படிப்பட்ட ஆண்களை பெண்கள் விரும்புகின்றனர் என்பது பற்றி 2,000க்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், கருப்பான ஆண்களையே, விரும்புகின்றனர் என்று தெரியவந்துள்ளது. சர்வேயில் பெண்கள் கூறிய சில சுவாரஸ்யமான தகவல்களை படியுங்களேன்.
கருப்பான ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது என்பது மிக பெரிய முட்டாள்தனம். கருப்பாக இருப்பவர்களைத்தான் அதிகம் விரும்புகின்றனர். பெண்களுடன் பேசும்போது கூச்சம், பயம் இருக்க கூடாது. தைரியமும் ஓரளவு திமிரும் உள்ள ஆண்ககளைதான் பெண்களுக்கு பிடிக்கும்.
தன்னம்பிக்கையும் வலிமையும் கொண்ட ஆண்களைதான் பெண்கள் விரும்புகிறார்கள்.பெண்கள் ஆண்களிடன் விரும்புவது ஆண்மை, கம்பீரம் இவற்றைதான். பெண்ணின் மீது உண்மையான அக்கறை காட்ட வேண்டும். அவள் உடல்நலம், மனநலம் பற்றி தேவைப்படும்போது கேட்கவேண்டும். தானாக போய் தேவை இல்லாத உதவிகளை செய்யாமல், தேவையான நேரத்தில் உதவி செய்ய வேண்டும்.
உண்மையாக இருக்கும் ஆண்களைதான் பெண்களுக்கு பிடிக்கும். நான் ரொம்ப அறிவாளி எனக்கு எல்லாம் தெரியும் என்று தம்பட்டம் அடிக்க கூடாது. அலட்டுகிற ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது. தேவைப்படும்போது சந்தேகங்கள், ஐடியாக்கள் கேட்டு அவர்களின் முக்கியதுவத்தை காட்டவேண்டும். அவர்கள் செயல்களை தேவைப்படும்போது பாராட்ட வேண்டும்.
நேரில் பேசுவதற்கு வந்தால், செய்து கொண்டிருக்கும் வேலையையோ அல்லது போனையோ நிறுத்தி அவர்கள் சொல்வதை கவனிக்க வேண்டும். கேர்ள் பிரண்ட் வேண்டும் என்பவர்கள் பெண்கள் பேசும்போது பொறுமை காக்க வேண்டியது அவசியம். அவர்கள் பேசும் போது நன்றாக கவனிக்க வேண்டும். அப்புறம் எப்பொழுதாவது அதே பேச்சு வரும்போது நான் கவனிக்கவில்லை, எனக்கு தெரியாது என்று சொதப்பிவிடகூடாது. அதேசமயம் ஆனால் அவர்கள் அழகை பற்றியோ அவர்களை எந்த அளவு விரும்புகிறீர்கள் என்பதை பற்றி, பொய் என்றாலும் நிறைய சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
இயல்பான நகைச்சுவை பேச்சு பெண்களுக்கு பிடிக்கும். அடிக்கடி சிரிக்க வைக்கும் ஆண்களை பெண்ணுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் கோமாளியாக செயல்படக்கூடாது. குறும்பான பேச்சு பெண்களுக்கு பிடிக்கும் என்றாலும் அது முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு இருக்க கூடாது. செக்ஸ் பற்றி பேசும்போது பேச்சானது நாகரீகமான முறையில் இருக்க வேண்டும். அநாவசியமாக மிக அருகில் செல்வதோ, தொட்டு பேசுவதோ கூடாது.
பெண்கள் மிகவும் பொஸசிவ்னெஸ் உள்ளவர்கள். அதனால் மற்ற பெண்களை புகழ்ந்தோ, அதிகம் பாராட்டியோ பேச கூடாது. எனக்கு நிறைய கேர்ள் பிரன்ட் உண்டு என்று சொல்லி வெறுப்பு ஏற்றக்கூடாது. ஏமாற்றும் எண்ணத்துடன் பழகும் ஆண்களை பெண்கள் உள்ளுணர்வில் சுலபமாக தெரிந்து கொள்வார்கள். அதனால் சக மனுஷி என்கிற முறையில் உண்மையான அன்பு 1% கூட இல்லாதவர்கள் பெண்களை தொந்தரவு செய்யாமல் இருப்பதே நல்லது. பெண்களை உடம்பாக மட்டும் பார்க்காமல் மனதும் உள்ள உயிராக பார்க்கும் ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புகின்றனராம். இந்த தகுதிகள் உங்களுக்கு இருக்கா அப்படின்னா உங்களுக்கு கேர்ள் ப்ரண்ட் கண்டிப்பாக கிடைப்பாங்க.