•  

குட்டி போட்ட பூனையா சுத்தி வரணுமா? அடிக்கடி ரொமான்ஸ் பண்ணுங்க!!

Sex
 
காதல் நினைவுகள், காதலோடு இணைந்த செயல்பாடுகள்தான் மனிதர்களை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. நேசத்தோடு சொல்லப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனடியாக நிறைவேற்றப்படும். தம்பதியருக்கிடையே அன்பு, பாசத்தோடு கொஞ்சம் ரொமான்ஸ் நினைவுகளும், செயல்பாடுகளும் இருந்தால்தான் இருவருக்கிடையேயான பிணைப்புகள் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.எதிர்பாராத நேரத்தில் கொடுக்கப்படும் முத்தம், சின்னச் சின்ன அணைப்பு போன்றவை ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம். அதுவே தம்பதியருக்கு இடையேயான நேசத்தை அதிகரிக்கச் செய்யும். ரொமான்ஸ் செயல்பாடுகளை அதிகரிக்க செய்யவேண்டியவைகளை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள்.காலையில் கண் விழிக்கும் போதே படுக்கை அறையில் இருந்தே ரொமான்ஸை தொடங்குங்கள். உங்கள் மனைவி எழுந்திருக்காமல் படுத்துக் கொண்டிருக்கிறாரா? நெற்றியில் முத்தமிட்டு அன்பாய் எழுப்புங்கள். அசதியில் புரண்டு படுக்கிறாரா? அன்றைக்கு நீங்கள் காபி போட்டுக் கொண்டுபோய் எழுப்புங்களேன். கண்ணத்தில் அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்து எழுப்பி பாருங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் மனைவி ஆசையாய் உங்களை கட்டி அணைத்துக் கொள்வார்.சமையல் அறையில் சங்கடத்தோடு சமைத்துக் கொண்டிருக்கிறாரா? மெதுவாய் பின்பக்கம் சென்று இருக்கமாய் அணையுங்களேன். மனைவியின் சோர்வுகள் அனைத்தும் பறந்தோடி விடும். அப்புறம் பாருங்கள் ஆசை ஆசையாய் உங்களுக்கு சமைத்து போடுவார்.அலுவலகம் செல்கிறீர்களா? வெறுமனை டாடா காட்டுவதை சின்னதாய் முத்தமிட்டு கிளம்புங்களேன். அந்த எனர்ஜி மாலை வரை இருக்கும். அலுவலகப் பணிகளிடையே அவ்வப்போது சின்னச் சின்னதாய் ரொமான்ஸ் மெசேஜ் அனுப்புங்களேன் உங்கள் மீதான காதல் அளவில்லாமல் அதிகரிக்கும்.மாலையில் வர லேட்டாகுமா? இந்த நேரத்தில் மெசேஜ் கை கொடுக்காது மறக்காமல் போன் செய்யுங்கள். உங்களின் தகவலோடு முத்தத்தையும் பதிவு செய்யுங்கள். உங்கள் தாமதமான வருகையை பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். இருவரும் வேலைக்குப் போகும் தம்பதியர் எனில் சின்னச் சின்ன சங்கடங்கள் எழும், இது இயல்பானதுதான். ஆனால் அதை பிரச்சினையை ஊதி பெரிதாக்குவதும், தண்ணீர் ஊற்றி அணைப்பதும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. கணவரை விட மனைவியின் பணி சிரமமானது என்றால் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போகலாம். பணிச்சுமை தெரியாமல் இருக்க இடைவேளை நேரங்களில் காதல் தகவல்களை குறுஞ்செய்திகளாக தட்டிவிடுங்களேன்.படுக்கை அறையில் இருவருக்கும் இடையேயான ரசனைகள் வேறு வேறாக இருக்கலாம். கணவர் ஹார்டுவேராக இருந்து மனைவி சாப்ட்வேராக இருந்துவிட்டால் சில சங்கடங்கள் எழும். எனவே தினசரி ஒரே மாதிரியான ஒருவருக்கு மட்டுமே பிடித்தமான உறவுகளில் ஈடுபடாமல் மனைவிக்கு பிடித்தமான முறையில் செயல்படுங்களேன். படுக்கை அறையில் யார் ஜெயிப்பது என்பது முக்கியமல்ல இருவரும் சந்தோசமாக இருக்கிறீர்களா என்பதுதான் முக்கியமான அம்சம். உங்களின் ஒருநாளைய விட்டுக் கொடுத்தல் பலநாள் சந்தோசத்திற்கு வழி வகுக்கும். அப்புறம் என்ன குட்டி போட்ட பூனையா உங்கள் மனைவி உங்களையே சுத்திச் சுத்தி வருவாங்க என்கின்றனர் நிபுணர்கள்.English summary
Romance is just as vital an aspect of any relationship as love and communication, and it can really define a successful relationship from one destined for failure. As distinct from love, romance is more of a trivially expounded virtue, but one which is essential in creating a feeling of content and satisfaction in any relationship. From a kiss on the cheek to an occasional bunch of flowers, romance is an attribute that few of us naturally possess, but with a little effort we can all bring to our relationships.
 
Story first published: Saturday, August 11, 2012, 10:54 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more