வெட்கம் வேண்டாம்
உங்களுக்கு என்ன தேவையோ அதை கேட்டுப்பெறுங்கள். தம்பதியருக்கும் வெட்கம் எதற்கு? உங்களின் ரசிப்புத் தன்மையுடைய செயலும், பேச்சும் கூட உங்கள் துணையின் உச்சபட்ச இன்பத்தை ஏற்படுத்தும், எனவே வெட்கப்படாமல் என்ன தேவையோ கேட்டுப்பெறுங்கள்.
பேச பேச புரியும்
தம்பதியர் இருவரும் படுக்கைக்கு செல்லும் முன்பே அன்றைக்கு தேவைப் படுவதை காதல் மொழி பேச்சில் புரியவைக்கலாம். உங்கள் துணை சற்று உற்சாகமிழந்து காணப்பட்டாலும், நீங்கள் பேசும் காதல் மொழியும், உங்களின் ரொமான்ஸ் நடவடிக்கைகளும் அவரை உற்சாகத்தில் ஆழ்த்தும்.
பாராட்டலாம் தப்பில்லை
படுக்கையறையில் வாழ்க்கைத்துணையை பாராட்டு மழை பொழியுங்கள். அவருடைய ஒவ்வொரு செயலையும் குறிப்பிட்டு பாராட்டலாம். அவர் அப்படியே பூரித்து போவார். உங்களின் அன்பான கவனிப்பும் அவரை உற்சாகத்தில் ஆழ்த்தும்.
புதிய முயற்சி வீண் போகாது
சாப்பிடும் உணவு ஒரே மாதிரியாக இருந்தாலே போராடிக்கும். தாம்பத்ய உறவும் இதற்கு விதி விலக்கல்ல. இருவரையும் பாதிக்காத வகையில் புதுவகையான வழிமுறைகளை கையாளலாம். இது காதல் உணர்வுகளை அதிகம் கிளர்ந்தெழச்செய்யும். உங்கள் வாழ்க்கைத்துணையும் திருப்பியடைவார்.
எனவே தம்பதியர் இருவரும் ஆரோக்கிய உறவை மேம்படுத்த இருவருக்கும் என்ன தேவையோ அதனை காதல் மொழி பேசி கேட்டுப் பெறலாம். இதனால் இருவருக்குமே திருப்தி ஏற்படும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.