•  

அழகாய் இருந்தா மட்டும் போதாது… புத்திசாலித்தனம் அவசியம்!

 
பெண்களுக்கு பிடித்த அம்சங்கள் இன்னதுதான் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. முக்கியமாக ஆண்களிடம் எந்த அம்சம் பிடிக்கும். எதுமாதிரி பெண்கள் எதிர்பார்ப்பார்கள் என்று எவராலும் எளிதில் தெரிந்து கொள்ள முடியாது. ஆண்களின் எந்த அம்சம் கவர்ச்சிகரமானதாக இருக்கும் என்று பெண்களைக் கேட்டால் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக பதிலளிப்பார்கள். எதுமாதிரியான அம்சங்கள் பெண்களை கவர்கின்றன என்று சராசரியாக பெண்களுக்கு பிடித்த அம்சங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ஆண்களின் கவர்ச்சி என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன.

நிறம் ஒரு பொருட்டல்ல

ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என பெரும்பாலான பெண்கள் எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து. அதனால்தான் அநேகம் பெண்கள் கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு என்று பாட ஆரம்பித்துள்ளனர். எனவே கலராய் இருந்தால் மட்டுமே பெண்களை கவர்ந்து விடலாம் என்று நினைத்திருக்கும் ஆண்களே கவனம் தேவை.

பொருத்தமான ஆடை

பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் அதே மாதிரி அம்சம் ஆணிடமும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பேண்ட்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல், தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை. இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான, நல்ல கலர் சென்ஸுடன், ஸ்மார்ட்டாக உடை அணிந்தால் பெண்களின் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்து விடலாம்.

கண்களைப் பார்க்கும் ஆண்கள்

முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை தேவையில்லாமல் கேட்க கூடாது. அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது அவளது கண்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். முகத்தைப் பார்த்துப் பேசும் ஆண்களையே அநேக பெண்கள் விரும்புகின்றனராம்.

நம்பிக்கை, நேர்மை

எடுத்தவுடனே பொய் சொல்லும் ஆண்களை எந்த பெண்ணுக்கும் பிடிக்காதாம். நேர்மையுடனும், நம்பிக்கையூட்டும் வகையிலும் பேசும் ஆண்களையே அதிகம் விரும்புகின்றனர்.

நகைச்சுவை உணர்வு

உர் என்ற முகத்துடன். நான் இப்படித்தான் என்று இறுக்கம் காட்டும் ஆண்களை எந்த பெண்ணும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. நகைச்சுவை உணர்வும், அறிவுப்பூர்வமான பேச்சும் உள்ள ஆண்களையே பெண்கள் விரும்புகின்றனர்.

ஆண்மைக்கு மீசை அழகு

ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்களின் மீசைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மீசை ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ தாடி பிடிப்பதில்லை. காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக பராமரிக்கத் தெரிவதில்லை என்பதுதான்.

நட்பாய் இருங்க காதல் கனியும்

எந்த பெண்ணுமே நட்பு ரீதியான பழக்கத்தையே விரும்புகின்றனராம். ஏனெனில் எந்த ஒரு பிரச்சினை என்றாலும் நட்பு என்றால் எளிதில் பகிர்ந்து கொள்ளலாம் என்பது அவர்களின் கருத்து. எனவே பெண்களிடம் முதலில் நல்ல நட்பை ஏற்படுத்திக்கொண்டால் அவர்களின் மனதில் உங்கள் மீது தானாய் காதல் கனியும்

இவை அனைத்தும் பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, இந்த எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.

English summary
However, women at times, expect a little too in terms of what they want in a man. Be it physical appearance, behavioural traits or personality attributes, women can't stop asking for more!
Story first published: Tuesday, February 7, 2012, 15:14 [IST]

Get Notifications from Tamil Indiansutras