தம்பதியர்கள் உறங்கும் முறை குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இங்கிலாந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான தம்பதியர் சரியான தூக்கமில்லாமல் அவதிப்பட்டதாக தெரிவித்து உள்ளனர்.
இதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது, கணவர் அல்லது மனைவியர், தங்கள் துணைக்கு கொடுக்கும் சில தொல்லைகள்தான் என்பதும் அப்போது தெரிய வந்தது. அதாவது, குறட்டை, பற்களைக் கடித்தல், படுக்கையில் புரள்தல் போன்றவற்றை அவர்கள் தொல்லைகளாக குறிப்பிட்டனர்.
இதுபோன்ற தொல்லைகளால் ஆரம்பக் காலங்களில் தூக்கம் கெட்டாலும், நாளடைவில் இதய நோய், மன அழுத்தம், பக்கவாதம், போக்குவரத்தின் போது விபத்துகள் போன்றவை ஏற்படுகிறது என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. ஒரே அறையில் ஒன்றாக உறங்குவதே இந்த பிரச்சினைக்கு காரணம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ஒரே படுக்கையறையில் உறங்கும் தம்பதியர் தூக்கம் கெடுவதனால் மன உளைச்சல் ஏற்பட்டு அது விவாகரத்தில் முடியவும் வாய்ப்பு உள்ளது என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். எனவே தம்பதியர் ஒரே படுக்கையை பகிர்ந்து கொள்வது ஆபத்தானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
பிரச்சினையை தவிர்க்க தனித்தனி படுக்கையில் உறங்குவதாக 8 சதவிகித தம்பதியர் கூறியுள்ளனர். இந்த ஆய்வு முடிவு, திருமணம் ஆகி குழந்தை பெற்ற தம்பதியருக்கு மட்டும்தான் பொருந்தும். இளஞ்ஜோடிகளுக்கு இந்த ஆய்வு முடிவு செல்லாது.