•  

யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்?

Love
 
தினசரி காலையில் எழுந்ததும் டீ, காபி குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட நாளிதழை பிரித்தவுடன் ராசி பலன் பார்ப்பதில் ஆர்வமுடையவர்களாக இருப்பர். இன்றைக்கு என்ன நடக்கும் என்பதை படித்து திருப்திப்பட்ட பின்பே வெளியில் கிளம்புவார்கள். என்ன ராசிக்கு என்ன பலன் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்முடையவரா நீங்கள்? அப்படியெனில் உங்களுக்குத்தான் இந்த கட்டுரை.

காதல் என்ற மந்திர வார்த்தைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். காதலிக்கிறோம் என்பதைவிட காதலிக்கப்படுகிறோம் என்பதில்தான் சுவாரஸ்யம் அதிகம். என்ன ராசிக்காரர்கள் காதலில் கில்லாடிகள் என்றும் யார், யார் காதலில் வெற்றி பெற முடியும் என்று தெளிவாக கூறியிருக்கிறார்கள் சோதிடவியல் வல்லுநர்கள். அவரவர் ராசிக்கு இந்த விளக்கம் சரியாக இருக்கிறதா என்று படித்து சோதனை செய்து கொள்ளுங்கள்.

காதல் நாயகன் யார்?

எதிலும் முதன்மையானவராக இருக்கும் மேஷ ராசிக்காரர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

காதலில் கைதேர்ந்தவர்கள் ரிஷப ராசிக்காரர்கள் என்றால் மிகையில்லை. தாங்கள் விரும்பும் நபரை 'பிராக்கெட்' போடுவதில் கில்லாடிகள் இந்த ராசிக்காரர்கள்.

இவர்களின் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். ரிஷப ராசிக்கார்ர்களின் காதல் கண்டிப்பாக வெற்றி பெரும். இவர்கள் தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்..

காதல் அரிது

மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். பிறரிடம் இவர்களுக்கு காதல் ஏற்படுவது அரிதே. எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும்.

கடக ராசிக்காரர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம்.

திருமணத்தில் கைகூடும்

சிம்ம ராசிக்காரர்கள் காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். இவர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர்.

சிம்ம ராசிக்காரர்கள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்

அன்பால் அடிமையாக்குபவர்

கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது.

கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும்,மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள்.

சிறந்த காதலி

துலாம் ராசிக்காரர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது.துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார்.

விருச்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடம் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார்.

காதலில் திறமைசாலி

தனுசு ராசிக்காரர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாலியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார்.

தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்

காதலின் வலிமை

மகர ராசிக்காரர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது. மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும்.

உண்மைக் காதல்

கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும்.

ஆசையை நிறைவேற்றுபவர்

மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். இவர்கள் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருப்பவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. மீன ராசிக்காரர்கள் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர்.

English summary
Love and zodiac signs are often related to each other. Though it is true that “Love is blind”, yet one can always trace some effect of zodiac signs on love. Zodiac sign reflects the major traits of a person. When two zodiac signs share more of similarities than differences, their compatibility becomes quite obvious. In some cases, if a person of particular zodiac sign is more aggressive then a calmer zodiac sign strikes a perfect balance with the former sign. The zodiac signs can determine the level of adjustment in making a match between people of different or the same sign.
Story first published: Friday, October 21, 2011, 8:42 [IST]

Get Notifications from Tamil Indiansutras