•  

இல்லறம் ஒரு இனிய சங்கீதம்!

Couple
 
இல்லறத்தில் தம்பதியரிடையே ஒரு அந்நியோன்யத்தை ஏற்படுத்தி பிணைப்பை அதிகப்படுத்துவது தாம்பத்தியமே. அது ஓர் இனிய சங்கீதம். தாம்பத்யத்தை இசைப்பதும், ரசிப்பதும் மென்மையாய் நிதானமாய் அமைய வேண்டும் அவசரங்களால் அரைகுறையாக அலங்கோலமாக ஆகிவிடும். தாம்பத்தியத்தில் எந்திரத்தனங்களும், எல்லைமீறல்களும் இனிமைதராது. அடிக்கடி வரைமுறையின்றி உறவு கொள்ள விரும்புவது ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும்.

ஆரோக்கியமே மூலதனம்

தாம்பத்திய உறவில் ஏதாவது ஒரு வரையரையைக் காலப்போக்கில் தம்பதியர்கள் தாங்களாகவே நிர்ணயம் செய்துகொள்வது முக்கியம். உறவுக்கு முன் இனிமையான உரையாடலும், உணர்வுப்பறிமாறலும், முன்விளையாடலும் உறவு முழுமைபெற உதவும்.

கணவன் மனைவியின் அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர். புரிந்துகொள்ள வேண்டும். இப்படிப்பேசினால் அநாகரீகம் அப்படிச் செய்தால் அநாகரீகம் என்று எண்ணத் தேவையில்லை. இருவரது விருப்பங்களில் ஆரோக்கியமான அனைத்துமே, சுகமான அனைத்துமே பாலியல் வாழ்க்கை நெறிப்படி சரியானதுதான்.

ஊட்டச்சத்து உணவுகள்

அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த - புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நிறைந்த சைவ / அசைவ உணவுக் கூறுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் உண்ண வேண்டும். தாம்பத்தியத்தின் தொடர் வெற்றிக்கு கணவன், மனைவி இருவரின் உடல்நலமும் மனநலமும் முக்கியம். ஆழ்ந்த மன பாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரி.

உணவு உண்ட ஒரு மணிநேரத்திற்குள் உடலுறவு கொள்வது கூடாது. இதனால் மூட்டுவலி உள்ளிட்ட பல உடல்நலக்கோளாறுகளும் ஏற்படும். எந்தச் சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியைப் பாதிக்கக்கூடிய மருந்துகளை உண்ணக்கூடாது.

சரியான அலைவரிசை

அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளால் கணவன் மனைவியரிடையே கருத்துவேறுபாடுகள், மனச்சோர்வுகள், மன இறுக்கங்கள் போன்றவை ஏற்படுவது இயல்பது. அது இல்லறத்தை பாதிக்கக் கூடாது. பரஸ்பரம் புரிந்துகொண்டு பேசித் தீர்க்க வேண்டும். மனஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டும் இணைய முயற்சிப்பது நல்லதல்ல.

தம்பதியரிடையேயான தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில் இருப்பதில்லை.ஆணுக்கு ஆவல் அடிக்கடி ஏற்படும். பெண்ணுக்கு விருப்பமில்லாதபோது தொல்லை தரக்கூடாது என்றெண்ணுவதால் விருப்பத்தை தள்ளிப்போடுகிறான். இது தொடர்கதையானால் மனைவி மீது ஒருவித வெறுப்பு ஏற்படுவது இயற்கையே.

எனவே பெண்கள் ஆண்களின் மனநிலையறிந்து இயன்றளவு தங்களை சரிசெய்துகொள்ளுவது இல்லறத்தை இனிக்கச் செய்யும். அடிக்கடி உடலுறவு கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு.ஆண்கள் அவர்களது விருப்பம் அறிந்து உதாசீனப்படுத்தாமல் ஒத்துழைப்பு தரவேண்டும்.

அச்சம் தேவையில்லை

வயது அதிகமாகும் போது. தாம்பத்திய உறவு இயலாமல் போய்விடுமோ என்ற அச்சம் தேவையற்றது. உடலுறுவுக்கு வயது ஒரு தடை அல்ல. பரஸ்பர மனவிருப்பம், தேவை அறிந்து உடல் எழுச்சியை வரவழைத்து தாம்பத்தியம் மேற்கொள்வது தம்பதியரிடம் என்றென்றும் இறுக்கமான பிணைப்பையும், இணைப்பையும் உறுதிப்படுத்தும்.

English summary
The relationship between a husband and wife is a very sensitive affair. It has to be based on mutual trust, love and care as well understanding. Much effort goes into maintaining the relationship.
Story first published: Friday, August 12, 2011, 17:53 [IST]

Get Notifications from Tamil Indiansutras