•  

செக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட உதவும் சிவப்பு

Seducing Red
 
தாங்கள் எப்படி எல்லாம் இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்களும் , தாங்கள் எப்படி எல்லாம் அழகாக காட்சி அளித்தால் வாலிப பட்டாளத்தை பின்னால் அலைய விடலாம் என்று பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறது ஒரு ஆராய்ச்சி. பல சுவாரஸ்யமான தகவல்களை கொண்ட அந்த ஆராய்ச்சி முடிவு பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

மனதை மயக்கும் சிவப்பு

பொதுவாகவே காதலர்களிடம் சென்று நீங்கள் காதலிப்பதற்கு என்ன காரணம் என்றால், நல்லகுணம், என்று பொய், மேல் பொய் சொல்வார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை காதல் வருவதற்கு அழகும், உடல் கூறும் தான் காரணம் என்று கூறும் ஆராய்ச்சிகள் ஒரு கட்டத்தில் சிவப்பு நிறத்தாலும் தான் பெரும்பாலும் செக்ஸ் உணர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் காதல் வலையில் விழுகிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், பொதுவாக சிவப்பு கலரில் உடை அணியும் பெண்கள் கவர்ச்சியாக தெரிவார்கள் என்கின்றனர்.

காமம் இல்லாத காதல் இல்லை என்பார்கள். அதுவும் இந்த ஆராய்ச்சியின் முடிவும் சரியாகத்தான் இருக்கிறது. உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை ஒரு பெண்ணை பார்த்த அடுத்த நிமிடத்திலேயே படம் எடுக்கிறது வாலிபர்களின் காமிரா கண்கள்...! கண்ணை பறிக்கிற சிவப்பு கலர் உடை அணிபவர்களுக்கு பாலுணர்வு தானாகவே வந்து விடுகிறது. சிவப்பு என்பது பெண்களை பகலிலும், இரவிலும் வசீகரிக்கும்ஒரு கலர் என்று தெரிவிக்கிறது அமெரிக்காவின் ரோசெஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள்.

ஆண்களை கவரும் பெண்கள்

பெண்களின் அழகுக்கு முதல் அழகு சேர்ப்பது கண்கள் தான். இதில் கண்களுக்கு மேக்கப் போடாத பெண்களை குறைந்த ஆண்களுக்கு மட்டுமே பிடிக்குமாம். அதுவும் கிராமபுறத்து வாலிபர்களுக்கு தான் இது போன்ற கண்கள் பிடிக்கும். ஆனால் நகரத்தில் வசிக்கும் வாலிபர்களுக்கு ஒவ்வொரு அழகு பிடிக்கிறது. ஐ லைனர் போடும் பெண்கள் பெரும்பாலான இளைஞர்களை வசீகரிக்கின்றனர். அவர்களின் கண் அழகும், முகம், சிரிப்பு என ஒட்டுமொத்தமாக வாலிபர்களை கட்டிவைக்கிறது இது போன்ற அழகுடன் கண் மேக்கப் செய்தவுடன் மேலும் அழகு சேர்ந்து கொள்வதால் பெண்களின் அழகுக்கு எப்போதுமே நாங்கள் அடிமை தான் என்று கூறும் அளவுக்கு இளைஞர்கள் மாறிவிடுகின்றனர்.

இயற்கை அழகை ரசிக்கும் வாலிபர்கள்

ஆனால் இதே அளவுக்கு மேக்கப்போடும் பெண்களை வெறுக்கும் வாலிபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் என்ன தான் இருந்தாலும் பெண்களுக்கு இயற்கையான அழகே, தனிதான் என்று ரசிக்கின்றனர். இப்படி வேறுப்பட்டு இருந்தாலும் அனைவரையும் கவர்ந்திழுப்பது பெண்களின் கண்கள் தான் என்பது மற்றொரு விசேஷம்...! கண்ணுக்கு மை அழகு... கவிதைக்கு பொய் அழகு என்பது போல பெண்ணின் கண்ணுக்கு மேக்கப் அழகு தான் என்கிறார்கள் காதலில் விழாதவர்களும்.

முத்தம் சிந்தும் உதடுகள்

அடுத்து பெண்களின் அழகை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காக இருப்பது உதடுகள். ஆண்களை விட பெண்களின் உதடுக்கு எப்பவுமே தனி மவுசுதான். அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இன்றைய காலகட்டத்தில் உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடாத பெண்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நாகரீகம் வளர்ந்து விட்டது. லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வதால் முகத்திற்கு பளிச்சென்ற தோற்றம் ஏற்படுகிறது.

உதட்டில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், வெய்யிலில் பாதுகாக்கவும் லிப்ஸ்டிக்கில் உள்ள மாய்சுரைசர் உதவுகிறது. இதே போல் உதடுகளுக்கு நிறம் கொடுக்கும் மற்றொரு பொருளாக லிப்கிளாஸ் உதவுகிறது. உதட்டினை பளப்பளப்பாகவும், மிருதுவானதாகவும் இது காட்டும். இதை பெரும்பாலான இளைஞர்கள் ரசிக்கின்றனர்.

பெண்களின் அடுத்த அழகாக உருவெடுத்துள்ளது நகங்கள். பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் நீண்ட நகங்கள் வளர்த்து வருகிறார்கள். பொதுவாகவே நகம் வளர்க்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது என்பது தான் பெண்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயம்.

பந்தா இல்லாத ஆண்கள்

சரி இனி ஆண்களைப்பற்றி சர்வே முடிவு என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆண்கள் அணியும் உடையின் வர்ணத்தில் சிவப்பு தூக்கலாக இருந்தாலே போதும், தன்னை அறியாமலே பெண்கள் திரும்பிப்பார்ப்பார்கள். சிவப்பு கலரில் பனியன், சட்டை போடும் ஆண்களை கவர்ச்சிகரமானவராக பெண்கள் உணர்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் பெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும். எளிமையான, நகைச்சுவை உணர்வு, பேச்சு திறமை கொண்ட ஆண்களை தான் பெண்கள் வளைத்து வளைத்து காதலிக்கிறார்கள் என்கிறது சர்வே...! பெண்களை கவர ஆண்களுக்கான செலவு கம்மிதான். ஆனால் தமக்கு பின்னால் ஆண்களை சுற்ற வைக்க வேண்டும் என்றால் பெண்களுக்குத்தான் செலவு அதிகம் பிடிக்கும் என்கிறது தெரிவித்துள்ளது ஆராய்ச்சி முடிவு.

English summary
Colors does play an important role in our life. It has got a rhythmic effect on individual. Every color emits radiation as per its index or wavelength, which is received by the mind of other individual. The individual can select the dress, color of car, walls of house, as per color suiting or harmonious to him. Over half of men vote red as their least favourite underwear colour.But almost two thirds of women think their men prefer red lingerie.
Story first published: Thursday, June 23, 2011, 11:13 [IST]

Get Notifications from Tamil Indiansutras