உடல் உறுப்புகளில் முக்கிய அங்கமாக திகழும் கண், காதலை உணர்த்துவதிலும், உயர்த்தவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது என்றால் அது மிகையில்லை.
காதலுக்கு கண் இல்லை என்று கூறுவது பொய். கண்கள் மூலம் தான் காதலை ஆத்மார்த்தமாக உணர்த்த முடியும் என்ற உண்மை கண்டறியப்பட்டுள்ளது. இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கண்ணும் கண்ணும் கலந்தால் இன்பம்
நமக்கு பிடித்த துணையுடன் நேருக்கு நேர் சந்தித்து நம் கண்களின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தினால் இருவரிடையே மிதமிஞ்சிய அன்பு அதிகரிக்கிறது என்கின்றனர் உளவியலாளர்கள். அன்பிற்குரியவர்களுடன் கண்களின் மூலம் பேசுவதால் நம்முடைய ரகசிய உலகத்திற்குள் அவர்கள் நேரடியாக சஞ்சரிக்க நாம் அனுமதிக்கின்றோம். இதனால் நெருக்கம் அதிகரிக்கிறது.
காதலை சொல்லும் கண்கள்
காதலிப்பவர்களானாலும், சரி மணமுடித்தவர்கள் என்றாலும் சரி தங்கள் துணையுடன் தினமும் சில நிமிடங்கள் கண்களால் பேசினால் அன்பு பலப்படும்.
சூரிய உதயத்தின் பொழுது ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் நின்று கொண்டு கண்களின் வழியே தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படுத்த வேண்டும். இதனால் தேவையற்ற சஞ்சலங்கள் நீங்குவதோடு ஒருவருடைய மனதில் உள்ளவற்றை நேரடியாக ஆத்மார்த்மாக அறிந்து கொள்ள முடிகிறது.
அமைதியான ஒரு அறையை தேர்வு செய்து இயற்கை வெளிச்சத்தில் அமர்ந்து கொண்டு தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ளலாம். இதனால் அன்பின் ஆழம் அதிகரிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பெற்றோர் நிச்சயித்த திருமணம்
இந்தியாவில் காதல் திருமணங்களை விட பெற்றோர் செய்து வைத்த திருமணங்களே அதிகம். எங்கேயோ பிறந்து வளர்ந்தவர்கள் திருமண பந்தத்தில் இணைந்து மனமொத்த தம்பதிகளாக வாழ்வதற்கு இந்த கண்களால் கலந்து பேசும் முறையே காரணம் என்கின்றனர் உளவியலாளர்கள்.
மக்கள் ஆபத்தான அல்லது இக்கட்டான சூழ் நிலையிலிருக்கும்போது, இருவருக்கிடையிலான உணர்வுப்பூர்வமான பந்தங்கள் மேலும் உறுதியாகின்றன என்பது தெரியவந்துள்ளது.
இதற்கான காரணங்கள்:
ஆபத்தான/இக்கட்டான சூழ் நிலையிலுள்ள ஒருவரை நாம் பார்க்கும்போது, அவர்களை அரவணைத்து ஆறுதல் சொல்வது அல்லது காப்பாற்ற வேண்டும் என்றுதானே நாம் நினைப்போம்! அப்படி நினைக்கும்போது அவர்கள்மீது அன்பு ஏற்பட்டு நெருக்கமாக உணர்வோம். அதன் காரணமாக, உடல் ரீதியான நெருக்கமும் ஏற்பட்டுவிடுகிறது.
நாமே ஒரு ஆபத்தான தருணத்தில் இருக்கும்போது, நம்மை காப்பாற்றி ஆறுதல் சொல்லும் ஒருவர் மீது ஒரு பற்று ஏற்படும். அதுவும் காதலில் முடிய வாய்ப்பு உண்டு. மேலும், ஒரே சமயத்தில் ஆபத்தான சூழ்நிலையிலுள்ள இருவருக்கு, பற்றுதல் உணர்வு ஏற்பட்டு காதலாய் வளரவும் வாய்ப்பு உண்டு.
உணர்வுப்பூர்வமான பந்தங்கள் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகள் இத்தகையவைதான். ஆக, திடமான செக்ஸ் ஈர்ப்பு, திகிலூட்டும் சூழ்நிலைகள், மிதமிஞ்சிய/வெறித்தனமான உடற்பயிற்ச்சி, வினோதமான சில சூழ்நிலைகள் இப்படி எல்லாமே மக்களை மற்றொருவரின் உதவி/ஆறுதலை நாடும் ஒரு பரிதாப நிலைக்கு (make people feel vulnerable) தள்ளிவிடுகிறது. அதேபோலத்தான், கண்களால் பேசிக்கொள்ளும்போதும் காதல் உணர்வு ஏற்படுகிறது
இரண்டு நபர்கள் கண்களால் கலந்து பேசுவதால் மனசு ஒத்து வாழ முடிகிறது என்கிறது உளவியல் உண்மை. கண்களால் பேசுவோம் காதலை கொண்டாடுவோம்.