•  

ஜூலியின் சாய்ஸ் 'நைட்ஸ்'!

Angelina Jolie
 
உலகம் முழுக்க ரொமான்ஸுக்கு உகந்த நேரம் இரவு என்பது ஹாலிவுட் டாப் ஸ்டார் ஏஞ்செலீனா ஜூலிக்கும் பொருத்தமாகவே உள்ளது. அவரும் கூட காதல் கணவர் பிராட் பிட்டுடன் ஹாப்பியாக செலவழிக்க இரவு நேரங்களையே தேர்ந்தெடுப்பாராம். பகல் நேரங்களில் மூச்!.

காதலுக்கும், காமத்துக்கும் நேரம் காலம் கிடையாது என்பார்கள். அதற்காக நேரம் காலமே தெரியாமல் அதிலேயே மூழ்கியிருப்பதும் தவறு என்றும் கருத்து உண்டு. இது ஜூலிக்கும் தெரியும் போலும். அதனால்தான் தனது ரொமான்ஸ் நேரத்தை படு கவனமாக தேர்ந்தெடுத்து அதை பக்காவாக பயன்படுத்துகிறாராம். இதனால்தான் அவரது காதல் வாழ்க்கை படு இனிமையாக இருக்கிறதாம்.

எனக்கு இரவு நேரங்கள்தான் மிகவும் பிடிக்கும். பி்ட்டுக்கும் அப்படித்தான். எங்களது தனிமையை நாங்கள் தீர்மானித்து விட்டவுடன், முதலி்ல ஆறு குழந்தைகளையும் முன்கூட்டியே சாப்பாடு கொடுத்து அவர்களது வேலைகளை முடித்து விட்டு, தூங்கச் செய்து விடுவோம். அதில் ஏதாவது ஒன்று வீம்பு செய்யும், வம்பு பண்ணும். இருப்பினும் சாப்பாடு தேவையென்றால் அவர்களே எடுத்து சாப்பிட்டுக் கொள்ளும் அளவுக்கு பழக்கி வைத்திருப்பதால் பெரிய அளவில் பிரச்சினை வந்ததில்லை.

பிறகு இருவரும் எங்களது ரொமான்ஸை ஆரம்பிப்போம். எங்களது வீட்டுக்குள் நுழையும் அளவுக்கு இன்னும் பாப்பராஸிகளின் தொல்லை இல்லை. எனவே அந்த தனிமையும், அதனுடன் இணையும் இனிய மெல்லிசையும், அழகான இருளும், மெல்லிய வெளிச்சமும் எங்களை மீண்டும் காதல் காலத்திற்கு கூட்டிச் சென்று விடும்.

அந்த இரவு நேரங்கள்தான் எங்களின் சக்தியாக விளங்குகிறது. இருவரும் மனம் விட்டுப் பேச, சுவையாக உரையாட அது வாய்ப்பு தருகிறது. எங்களது காதல் இன்று வரை நீர்த்துப் போகாமல் இருக்கவும் இதுதான் காரணம்.

இன்று கணவன், மனைவியரிடையே நெருக்கம் இல்லாமல் போவதற்கு இப்படிப்பட்ட தனிமைகள் கிடைக்காததே காரணம். அதை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் இதற்காக மெனக்கெடுகிறோம். இனிமையான வாழ்க்கையை தொடருகிறோம்.

அம்மா, அப்பா என்பதைத் தாண்டி நாங்கள் காதலர்கள் என்ற உணர்வும் எங்களுக்குள் இருக்கிறது. அது எல்லோருக்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் கணவன், மனைவியாகவும் நாம் வெற்றிகரமாக செயல்பட முடியும் என்கிறார் ஜூலி.

யோசிக்க வேண்டிய விஷயம்தான்- இப்படிப்பட்ட சிந்தனை இல்லாதவர்கள்.

Story first published: Wednesday, August 4, 2010, 17:49 [IST]

Get Notifications from Tamil Indiansutras