•  

இன்று பெண்கள் உடுத்தும் பிரா கண்டுபிடிக்கப்பட்டு 100 ஆண்டுகளாகிறது.

Bra
 
கடந்த 1910ம் ஆண்டு நியூயார்க்கைச் சேர்ந்த பெண்மணியான மேரி பெல்ப்ஸ் ஜேக்கப் என்பவர்தான் இப்போது பெண்கள் அணியும் பிராவைக் கண்டுபிடித்தவர் ஆவார்.

ஸ்டீம் போட்டைக் கண்டுபிடித்த ராபர்ட் புல்டன் பரம்பரையைச் சேர்ந்தவர் மேரி. 1910ம் ஆண்டு 19 வயதாக இருந்த மேரி, அப்போது நடைமுறையில் இருந்த உள்ளாடையை அணிந்த போது மிகவும் அசவுகரியமாக உணர்ந்துள்ளார்.

இப்படி ஒரு உள்ளாடையா என்று கடுப்பான அவர் தனது வேலைக்காரப் பெண்ணை அழைத்து, இரண்டு வெள்ளை நிற கர்ச்சீப்களை கையில் கொடுத்து அவற்றை ஒரு பிங்க் நிற ரிப்பனால் இணைத்து (அதாவது இப்போது உள்ள பிராவைப் போல) அதை தனது மார்பில் அணிந்து கொண்டு பின்புறமாக கட்டிக் கொண்டார்.

இது பெரிய அளவில் வசதியாக இல்லாவிட்டாலும் கூட அப்போது இருந்த பிராக்களை விட மிக மிக வசதியாக இருந்ததாக மேரி உணர்ந்தார். இதையடுத்து இதே பாணியைக் கடைப்பிடித்து விதம் விதமான முறையில் தனது தேவைக்கேற்ப உள்ளாடையை உருவாக்கிப் பார்த்தார்.

அதில் அவருக்கு வெற்றி கிடைத்தது. இதை தனது தோழிகளிடம் சொல்ல அவர்களுக்கும் ஆர்வம் அதிகமாகி அவர்களும் கேட்டு வாங்கி அணிய ஆரம்பித்தனர். இப்படியாக மேரி உருவாக்கிய பிரா பிரபலமானது. இதையடுத்து 1914ம் ஆண்டு அவர் காப்புரிமை பெற்றார். பின்னர் வெறும் 1500 டாலர்களுக்கு அந்த காப்புரிமையை வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திடம் விற்றார்.

அதன் பிறகு உலகம் முழுவதும் மேரி தயாரித்த பிராக்கள் புகழ் பெற ஆரம்பித்தன. 1970ம் ஆண்டு தனது 78வது வயதில் மேரி மரணமடைந்தார். அப்போது பிரா தயாரிப்பு பெரும் தொழிலாக மாறியிருந்தது.

தான் கண்டுபிடித்த பிரா குறித்து மேரிஒருமுறை கூறுகையில், பிரேசியருக்கு வரலாற்றில் இவ்வளவு பெரிய இடம் கிடைக்கும் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. எனது சுய தேவைக்காகவே இதை உருவாக்கினேன். ஆனால் இது இன்று உலகம் முழுவதும் முக்கியமான விஷயமாக மாறியுள்ளது. ஆச்சரியமாக இருக்கிறது என்றார் மேரி.

Story first published: Wednesday, July 14, 2010, 17:39 [IST]

Get Notifications from Tamil Indiansutras