இவர்களை நோய் அவ்வளவு சீக்கிரம் அண்டுவதில்லையாம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்கள் சுகாதாரத் திட்டத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் இதுதொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
செக்ஸ் வாழ்க்கையில் திருப்திகரமாக இருக்கும் பெண்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியமும், மன நலமும் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
20 முதல் 65 வயது வரையிலான 300 பெண்களிடம் இதுதொடர்பான ஆய்வு நடத்தப்பட்டுத. இதன் முடிவுகள் குறித்து இந்தக் குழுவின் தலைவரான டாக்டர் சோனியா டேவிசன் கூறுகையில், செக்ஸ் ரீதியாக திருப்தி இல்லாத பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் குறைவாகவே உள்ளது. அவர்களது செயல் திறனும் கூட குறைந்தே காணப்படுகிறது.
உடல் நலம் குறித்த விவகாரத்தில் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி என்பதும், ஆர்கசத்தை அடைவதும் முக்கியமானதாக உள்ளதையே இது காட்டுகிறது.
பெண்கள் பொதுவாக ஆர்கசம் குறித்து தங்களது டாக்டர்களிடம் சரிவர விவாதிப்பதில்லை. அதற்கு அவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள் அல்லது வெட்கப்படுகிறார்கள்.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பெண்களில் 90 சதவீதத்தினர் தாங்கள் ஒருவருடன் உடல் ரீதியான உறவில் இருப்பதாகவும், செக்ஸ் உறவுகளில் பாதியை தங்களது பார்ட்னர்தான் தொடங்கி வைப்பதாகவும் கூறினர் என்றார்.
பாலியல் மருத்துவ நிபுணர் டாக்டர் இர்வின் கோல்ட்ஸ்டீன் கூறுகையில், பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நலனில் ஆர்கசம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது என்றார்.