•  

சென்னையில் பிப். 13ல் பாலியல் மருத்துவ மாநாடு

Doctor
 
சென்னை: சென்னையில் வருகிற 13ம் தேதி சர்வதேச பாலியல் மருத்து மாநாடு நடைபெறுகிறது.

இந்திய பாலியல் மருத்துவ சங்கம் மற்றும் சென்னை பல்கலைக்கழகம் சார்பில் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெறும் இந்த மாநாடு 2 நாட்கள் நடைபெறும்.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற 800 பாலியல் மருத்துவ நிபுணர்கள்கலந்து கொள்கிறார்கள்.

பாலியல் குறைபாடு, குழந்தையின்மை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.

13-ந்தேதி அன்று நடைபெறும் முதல் நாள் மாநாட்டில் ஆண்- பெண் இடையேயான பாலுறவு வேறுபாடு பற்றி டாக்டர்கள் டென்சில், அமீர்ஜான், சுமதி ஆகியோரும் இணைய தளங்களும் பாலுறவும் என்ற தலைப்பில் டாக்டர் பரமேஸ்வரியும் விளக்கம் அளிக்கிறார்கள். ஆண்மைக் குறைபாட்டை தீர்ப்பது பற்றி மும்பை டாக்டர் மட் செஸ்வலா பேசுகிறார்.

திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை, புதுமண ஜோடிகளுக்காக செக்ஸ் தெரபி பற்றி டாக்டர் காமராஜ் விளக்கம் தருகிறார்.

14-ந்தேதி அன்று டாக்டர் நாராயண ரெட்டி ஆண்களிடம் உள்ள பாலியல் குறைபாடு பற்றி விளக்கம் அளிக்கிறார். பெண்களிடம் உள்ள பாலியல் குறைபாட்டை தீர்ப்பது பற்றி டாக்டர் ராஜ்மோகன் பேசுகிறார்.

இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை டாக்டர்கள் கே.எஸ்.ஜெயராணி, டி.காமராஜ் ஆகியோர் செய்து வருகிறார்கள்

தற்போது மரபணு காய்கறி- பழங்கள் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது. வாஷிங்டன் ஆப்பிள், ஆஸ்திரேலிய ஆரஞ்சு, பெங்களூர் பெரிய மஞ்சள் வாழைப்பழம், பெங்களூர் தக்காளி மற்றும் பெரிய அளவில் உள்ள காய்கறி- பழங்கள் அனைத்தும் மரபணு மாற்றம் செய்யப்பட்டவைதான்.

இந்த மரபணு காய்கறி- பழங்களின் விதைகளில் உள்ள முளைக்கும் தன்மை அகற்றப்பட்டு மலடாக்கப்படுகிறது. இதை சாப்பிடுபவர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என்று மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து இந்த மாநாட்டில், அமெரிக்க மருத்துவ நிபுணர் ஜெப்ரி ஆய்வறிக்கை ஒன்றை தாக்கல் செய்யவுள்ளார்.

மரபணு மாற்ற காய் கறி- பழங்களால் ஆண்களின் உயிரணு மலடாவதால், எதிர்காலத்தில் உயிரணு வங்கிகளிடம் இருந்து உயிரணு பெற்றுத்தான் பெண்கள் கருத்தரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

Story first published: Friday, February 5, 2010, 16:09 [IST]

Get Notifications from Tamil Indiansutras