•  

இங்கிலாந்தில் டிசைனர் பிரா, பேண்டீஸ்களுக்கு கிராக்கி அதிகரிப்பு

Bras
 
இப்போதைய பெண்களிடையே தங்களது அந்தரங்க அழகை ஆராதனை செய்யும் மோகம் அதிகமாக உள்ளதாம். பேண்டீஸ் மற்றும் பிராக்களின் விற்பனை அதிகரிப்பு மட்டுமல்லாமல் குவிந்து வரும் புதுப் புது டிசைன்களும், விதம் விதமான மாடல்களும் இதை நிரூபிப்பதாக உள்ளது. இதனால் இவற்றின் விற்பனையும் இதுவரை இல்லாத அளவுக்கு பெருமளவில் அதிகரித்துள்ளதாம்.

முன்பை விட இப்போது பிராக்கள் மற்றும் பேண்டீஸ்களின் விற்பனை வெகுவாக உயர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 117 சதவீத உயர்வைக் கண்டுள்ளதாம் இவற்றின் விற்பனை.

உலக அளவில் இந்த விற்பனை அதிகரிப்பு காணப்படுகிறது. குறிப்பாக இங்கிலாந்தில் பிராக்கள் மற்றும் பேண்டீஸ்களில் பல்வேறு விதமான மாடல்கள் இந்த காலகட்டத்தில் குவிந்திருக்கின்றனவாம். எத்தனை டிசைன்களை அறிமுகப்படுத்தினாலும் அவை பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுகிறதாம். புதிய மாடல்களைக் கேட்டு வரும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாம்.

பெண்களுக்கான உள்ளாடைகளில் பிராக்களுக்குத்தான் நிறைய டிசைன்களை அறிமுகப்படுத்துகின்றனர் டிசைனர்கள். பல்வேறு விதமான, வடிவிலான, பிராக்களின் பெருக்கத்தால் பெண்களுக்கு 'சூஸ்' செய்வதற்கு இப்போது நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன.

முன்பெல்லாம் பிராக்களை அணிவதோடு பெண்கள் நின்று விடுவார்கள். இப்போது தங்களது மார்புகளின் தேவைக்கேற்ப அணிய விரும்புகிறார்கள். இதுவும் பிரா மாடல்கள் அதிகரிப்புக்கு ஒரு காரணம்.

மேலும், பிரபல நடிகைகள், மாடல் அழகிகள் அணியும் பிராக்கள் மற்றும் பேண்டீஸ்களும் இப்போது பெண்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி அதே டிசைன், மாடலைக் கேட்டு வர ஆரம்பித்துள்ளனராம்.

சமீபத்தில் லண்டனைச் சேர்ந்த ஒரு பேஷன் டிசைன் நிறுவனம் புதிய வகை மாடல் பிராவை அறிமுகப்படுத்தியது. அது விற்பனைக்கு வந்த சிறிது நேரத்திலேயே அத்தனை கடைகளிலும் விற்றுப் போய் விட்டதாம். முன்கூட்டியே அந்த பிரா குறித்து நிறைய விளம்பரப்படுத்தியிருந்ததால் பெண்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டு ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் வந்து பிராக்களை அள்ளிக் கொண்டு போய் விட்டனர்.

இதுகுறித்து உள்ளாடை விற்பனையக உரிமையாளர் ஒருவர் கூறுகையில், முன்பை விட இப்போது உள்ளாடைகள் மீது பெண்களுக்கு புதிய மோகம், கூடுதல் அக்கறை பிறந்துள்ளது. முன்பெல்லாம் எந்தவித டிசைனும் இல்லாமல், பிரா மற்றும் பேண்டீஸ் அணிந்து வந்த பெண்கள் இப்போது டிசைன்களை எதிர்பார்க்கிறார்கள்.

விதம் விதமான மாடல்களை அவர்கள் விரும்புகிறார்கள். எப்படி வெளி உடைகளை விதம் விதமானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதேபோல இப்போது உள்ளாடைகளையும் விதம் விதமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

முன்பு மார்பழகு குறித்து அதிகம் மெனக்கெடாத பெண்கள் இப்போது விதம் விதமான பிராக்களின் மூலம் தங்களது மார்பழகை சிறப்பாக வெளிப்படுத்துவதில் அக்கறை காட்டுகிறார்கள். அதற்கேற்ப பல்வேறு வகையான பிராக்கள் மார்க்கெட்டில் தற்போது உள்ளது.

இங்கிலாந்தைப் பொறுத்தவரை பிரா மட்டும் வாங்க பெண்கள் ஆண்டுக்கு 2700 பவுண்டுகள் வரை செலவழிக்கிறார்களாம். அதேபோல ஒவ்வொரு பெண்ணிடமும் குறைந்தது 16 வகையான பிராக்கள் இருக்கிறதாம்.

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், இங்கிலாந்துப் பெண்களின் மார்பு அளவு சமீப ஆண்டுகளில் சராசரியாக 34பி என்பதிலிருந்து 36 டியாக உயர்ந்துள்ளதாம்.

பிரா, பேண்டீஸ் தவிர பின்னழகை எடுப்பாக காட்டக் கூடிய வகையிலான ஜீன்ஸ் பேன்ட்டுகள் உள்ளிட்ட மேலும் பல அழகு சமாச்சாரங்களும் கடைகளில் கல்லாக் கட்டிக் காத்திருப்பதால், தங்களது உடல் அழகைக் கூட்டிக் கொள்ளும் பெண்களின் அளவும் அதிகரித்தபடியே போகிறதாம்.

பெரிய மார்பு உள்ளவர்களுக்குத்தான் டிசைன்கள் என்றில்லாமல், சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கும், அவர்களது மார்பழகை எடுப்பாக காட்டக் கூடிய வகையிலான பிராக்களும் மார்க்கெட்டில் ஏராளமாக இருப்பதால் அவற்றின் விற்பனையும் அள்ளிக் கொண்டு போகிறதாம்.

English summary
A large number of Brit babes are going lingerie shopping in a big way - a trend that has soared the sales of women's undies to an incredible 117 per cent in the past six months. Such high sales boosts the economy. "Women have a love affair with beautiful lingerie and sales from our ranges show this is currently a huge trend. It is seen as less of an indulgence and more a part of their day-to-day wardrobe," the Daily Star quoted a spokeswoman for the store as saying. "Women take as much care and attention with their underwear as they do with their outerwear," she added.
Story first published: Thursday, May 5, 2011, 11:46 [IST]

Get Notifications from Tamil Indiansutras