•  

திருமணம் சுமையல்ல, சுகமே!

Marriage
 
நண்பர்கள் யாராவது திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்தாலே ஐயோ பாவம் என்ற ரீதியில்தான் அதனை வாங்கும் பழக்கம் இன்றைய இளைஞர்களிடையே உள்ளது. திருமணம் பற்றிய பேச்சை எடுத்தாலே காததூரம் ஓடுபவர்கள்தான் இருக்கின்றனர். திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பது பழமொழி அதனை போற்றி பாதுகாப்பது அனைவரின் கடமை. திருமணம் என்பது அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஆரம்பம் எனலாம்.

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் திருமணம் செய்ய இயலாதவர்கள் உடல் ரீதியாகக் கெட்டுப் போகிறார்கள். அவர்களுக்கு மனரீதியான பாதிப்பும் ஏற்படுவதாக ஆய்வு தெரியவந்துள்ளது

திருமணத்தின் அவசியம்

மனித வாழ்க்கையில் திருமணம் எந்த அளவிற்கு அவசியம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. திருமணத்தின் மூலம் உடல் ரீதியாக பல நன்மைகள் ஏற்படுவது போல மனோரீதியாகவும் பல நன்மைகள் விளைவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

WHO-வின் மனநலப் பிரிவு மற்றும் நியூசிலாந்து பல்கலைக்கழகம் இணைந்து கடந்த 10 ஆண்டுகளாக இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. அதில் 15 நாடுகளைச் சேர்ந்த 34 ஆயிரத்து 500 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் வெளியான சில முக்கிய தகவல்கள்…

பறந்துபோகும் மனச்சோர்வு

இளம்பருவத்தினர் இருபாலரிடமும் திருமணத்தைப் பற்றி எதிர்மாறான கருத்துக்களே இருக்கிறது. அதாவது திருமணத்தை கூடுதல் சுமையாகவும், கவலையாக கருதும் எண்ணம் உள்ளது. அதிலும் பெண்களைவிட ஆண்கள் திருமணம் செய்வதற்கு விருப்பக் குறைவுடன் இருக்கிறார்கள். அதிக மனச்சோர்வு அடைகிறார்கள். அதே நேரத்தில் திருமணம் செய்து கொண்டபிறகு பெண்களைவிட ஆண்கள் அதிகமான மனச்சோர்வு, கவலைகளில் இருந்து விடுபடுகிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

திருமணம் செய்து கொள்வதால் மனச்சோர்வு, கவலை மற்றும் மனநல பாதிப்புகள் குறைகிறது. டிஸ்ஆர்டர் பாதிப்புகளும் குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள் அதிகம் கல்வி அறிவு பெற்றிருப்பதால் சோர்வு நிலை குறைவாக இருக்கிறது. சிலரிடம் மட்டும் அதிகமிருக்கிறது.

தம்பதிகள் பிரிந்து வாழ்வது, யாரேனும் ஒருவர் இறந்துவிடுவது, விவாகரத்து பெற்றுக் கொள்வது போன்ற காரணங்களால் ஏற்படும் மனநல பாதிப்புகள் அதிகரித்து உள்ளன. குழந்தைக்காக சார்ந்து வாழ்வதில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

English summary
Thirteen of the top scholars on family life have issued a joint report on the importance of marriage. Marriage increases the likelihood fathers will have good relationships with children, they said.
Story first published: Tuesday, August 9, 2011, 12:44 [IST]

Get Notifications from Tamil Indiansutras