தடுக்கி விழுந்தால் இப்போது அழகிப் போட்டிகள்தான். மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற அழகிப் போட்டிகள் ஏராளமாக உள்ள. அதில் பங்கேற்பதையும், வெற்றி பெறுவதையும் அழகிககள் பெருமையாகவும், பெரிதாகவும் நினைக்கின்றனர்.
இப்படிப்பட்ட பெருமைமிக்க ஒரு அழகிப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவதற்காக தனது சின்ன மார்புகளை அறுவைச் சிகிச்சை மூலம் பெரிதாக்கி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் அழகி கேரி பிரிஜீன்.
இதற்கு அந்த அழகிப் போட்டியை ஏற்பாடு செய்த நிர்வாகிககளே உதவியும் உள்ளனர். இதை மிஸ் கலிபோர்னியா போட்டியை ஏற்பாடு செய்த அமைப்பின் இணை இயக்குநர் கீத் லூயிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், இந்த மார்பக மாற்று அறுவைச் சிகிச்சைக்கான செலவுகளையும் மிஸ் கலிபோர்னியா நிர்வாகமே ஏற்றுக் கொண்டதாம். மிஸ் கலிபோர்னியாவில் வெற்றி பெற்ற கேரி, மிஸ் அமெரிக்கா போட்டியிலும் வெல்ல வேண்டும் என்பதற்காக இந்த உதவியை செய்ததாம் மிஸ் கலிபோர்னியா போட்டி நிர்வாகம்.
இதுகுறித்து கீத் லூயிஸ் அளித்துள்ள பேட்டியில், எங்களிடம் கேரி பிரீஜன் வந்தபோது, தான் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். நாங்களும் அவருக்கு உதவினோம்.
அவருக்குள் அதிகபட்ச நம்பிக்கையை உருவாக்கவே இந்த உதவியைச் செய்தோம். மேடையி்ல் நிற்கும்போது அவரிடம் நம்பிக்கையும், அழகும் எடுப்பாக இருக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்று கூறியுள்ளார்.
இப்படி ஒருவருக்கு மட்டும் நீங்கள் மார்பை அழகுபடுத்த நீங்கள் உதவியதால் மற்ற அழகிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்குமே என்ற கேள்விக்கு, நிச்சயம் இருக்கலாம். ஆனால் கேரி எங்களை அணுகினார் நாங்கள் அவருக்கு உதவினோம் என்று கூறினார் கீத்.
சரி, எல்லாம் செய்தீர்கள், எதற்காக இலவசமாக செய்து கொடுத்தீர்கள், காசு வாங்கியிருக்கலாமே என்ற கேள்விக்கு, காசு வாங்கிக் கொண்டு செய்யும் வேலை இல்லை இது. ஒரு பெண் தான் அழகாக இருக்கிறோம் என்ற நம்பிக்கையை அவருக்குள் ஊட்ட எங்களுக்கு கிடைத்த வாய்ப்பு இது. எனவேதான் இதற்கான கட்டணத்தை நாங்கள் கேரியிடமிருந்து பெறவில்லை என்று கூறியுள்ளார் கீத்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்ற பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது...