•  

365 டேஸ் ஆப் செக்ஸ்!!

Charla and Brad Muller
 
இது சினிமா ஒன்றில் வரும் பாடல். ஆனால் அமெரிக்காவில் ஒரு பெண்மணி, தனது கணவருடன் 'கேப்'பே இல்லாமல் 365 நா(நை)ட்கள் 'சேர்ந்திருந்து' புது சாதனை படைத்துள்ளார் -அதை புத்தகமாகவும் வெளியிட்டு கணவருக்குப் பிறந்த நாள் பரிசாக அளித்து அசத்தியுமிருக்கிறார்.

365 nights of sex - இதுதான் அமெரிக்காவைச் சேர்ந்த சார்லா முல்லர் என்ற அந்தப் பெண் எழுதிய புத்தகம். அமெரிக்காவில் அத்தனை பேரும் இந்த புத்தகம் குறித்துதான் இப்போது பேசிக் கொண்டிருக்கின்றனர்.

சார்லா முலல்ர் ஒரு பி.ஆர். அதிகாரி. இவரது கணவர்
பிராட். 42 வயதாகும் பிராட், சேல்ஸ்மேன் ஆவார்.

கணவருக்கு பிறந்த நாள் பரிசாக என்ன கொடுக்கலாம் என்று யோசித்தபோது தானும், கணவரும் சேர்ந்திருந்த தருணங்களை, இரவுகளை எழுத்து வடிவாக்கி அதை புத்தகமாக கொடுக்கலாம் என முடிவு செய்தாராம் சார்லா.

எப்படி வந்தது இந்த ஐடியா என்று சார்லாவிடம் கேட்டால்...

எனது கணவரின் 40வது பிறந்த நாளின்போது தொடர்ந்து ஒரு வருடத்திற்கு (365 நாட்கள்) நாம் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டால் என்ன என்று கேட்டேன். அவரும் சம்மதித்தார். இதையடுத்து தொடங்கியது எங்களது 'நான் ஸ்டாப் செக்ஸ் ரொமான்ஸ்'.

இந்த உறவின் தருணங்களை நான் புத்தகமாக்கி அதை 41வது பிறந்த நாளின்போது பிராடிடம் பரிசாக அளிக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டு எங்களது தினசரி இரவுகளை சந்தோஷத்தோடு களித்தேன்.

ஒருமுறை இதுகுறித்து அவரிடம் பேசியபோது அவர் முதலில் ஒத்துக் கொள்ளவில்லை. நல்ல ஐடியாதான், ஆனால் வேண்டாமே என்றார். பின்னர் எப்படியோ சமாளித்து அவரை சரிக்கட்டினேன் என்கிறார் சார்லா.

இனி சார்லாவின் புத்தகத்திலிருந்து சில துளிகள்...

- இரவுகளில் மட்டும் நாங்கள் இணைந்து இயங்கவில்லை. பகலிலும் கூட ஒருவரை ஒருவர் அக்கறையோடும், புரிந்து கொள்ளுதலோடும் பழகினோம். தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டதால் எனக்கு நிறைய புத்துணர்ச்சி, சுறுசுறுப்பு கிடைத்தது. நிறைய வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யத் தோன்றியது.

அதை விட முக்கியமாக நம்மைப் போலவே மற்றவர்களும் காதலோடு இருக்கிறார்களா என்ற க்யூரியாசிட்டியும் ஏற்பட்டது.

- சில நேரங்களில் நான் எனது கால்களை ஷேவ் கூட செய்யாமல் இருப்பேன். வியர்வை நாற்றத்துடன் கூட சில முறை படுக்கைக்குப் போயிருக்கிறேன். ஆனால் பிராடின் செக்ஸ் மூடை அவை பாதிக்கவில்லை. நான் செக்ஸியாக இருப்பதாகவே அப்போதும் அவர் கூறுவார்.

- ஒரு கட்டத்தில் தினசரி பல் விளக்குவது, குளிப்பது போல நம்முடைய செக்ஸ் வாழ்க்கையும் தினசரி பழக்கமாகி விடும் போலிருக்கே என நினைத்ததுண்டு.

- நான் ஸ்டாப் உறவை ஆரம்பித்து 3 மாதங்கள் இருக்கும். அப்போது ஒரு நாள், 88 நாட்கள் தொடர்ந்து சேர்ந்து விட்டோம். இத்துடன் நிறுத்திக் கொள்ளலாமா என்றார் பிராட். நான் விடவில்லை. இன்னும் நிறைய நாள் இருக்கிறது பாஸ் என்று கூறி பிராட் வைக்க நினைத்த முற்றுப்புள்ளியை, கமா ஆக்கினேன்.

- 6 மாதங்களாகி விட்டது. இப்போது எனக்கு ஒரு சந்தேகம். இப்படி தொடர்ந்து சேர்ந்து கொண்டிருக்கிறோமே, இது சலித்துப் போய் விடாதா, புதுமையாக எதையும் சிந்திக்கும் மன நிலை போய் விடுமா என்றெல்லாம் சந்தேகம் வந்தது. அந்த பயத்திற்குக் காரணம், என்னால் புதுசு புதுசாக பிராடை குஷிப்படுத்த முடியாமல் போனதே.

முன்பு அவ்வப்போது செக்ஸ் வைத்துக் கொண்டபோது அது நிறைய திரில்லிங்காக இருக்கும். புதிய விஷயங்களை இருவருமே செய்து பார்ப்போம். அனுபவம் நன்றாக இருக்கும். ஆனால் இந்த நான் ஸ்டாப் செக்ஸ் வந்த பிறகு அது சற்று குறைந்து போய் விட்டது. இருப்பினும் எங்கள் இன்ப பயணத்தைத் தொடர்ந்தோம்.

- ஒரு வழியாக எங்களது மாரத்தான் முடிந்தது. பெரிதாக எதையோ சாதித்தது போல உணர்ந்தேன். வீடெல்லாம் சந்தோஷமாக சுற்றி வந்தேன். நான் சாதித்து விட்டேன் என்று உரக்க குரல் எழுப்பினேன். பிராட் அதை ரசித்தார்.

இதோ எங்களது இனிய அனுபவங்கள் இப்போது பிராடின் கையில் புத்தகமாய்...

சார்லாவின் இனிய அனுபவங்கள் இப்போது அமெரிக்கா முழுவதும் ஆச்சரியத்துடன் படிக்கப்பட்டு வருகிறது...

Get Notifications from Tamil Indiansutras