உறவா- உறக்கமா என்ற தலைப்பில், எடின்பர்க் தூக்க மையத்தின் சார்பில் இதுதொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 8500 பேருக்கும் மேல் அதில் கலந்து கொண்டனர்.
இவர்களில் 80 சதவீதம் பேருக்கு உடலுறவை விட உறக்கமே பிடித்திருக்கிறதாம்.
மேலும், பத்து பேரில் 7 பேருக்கு நிம்மதியற்ற தூக்கம் இருக்கிறதாம். அவர்களில் பாதிப் பேர் (அதாவது 7 பேரில்) இன்சோம்னியா பீடித்துள்ளதாம். படுத்தால் தூக்கம் வராது, பாதியில் விழித்துக் கொண்டால் மீண்டும் தூங்க முடியாது. இப்படி சிக்கலை அனுபவிப்பவர்கள் அவர்கள்.
கிடைக்கும் நேரத்தை தூக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதையே நாங்கள் விரும்புகிறோம் என 79.2 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
காதலா, உறவா, உறக்கமா என்று கேட்டால் தூக்கத்திற்கே நாங்கள் முதல் முக்கியத்துவம் தருகிறோம் என்பது இவர்களின் கருத்தாம்.
மாறி விட்ட வேலை முறைகள், போட்டி போட வேண்டிய நிர்ப்பந்தங்கள், பல்வேறு மனக் கவலைகள் என பல்வேறு காரணிகளே இப்படி அருமையான இரவைக் கூட உறவுக்கு பயன்படுத்தாமல், தூக்கத்திற்கு பயன்படுத்த நினைப்பதற்கு முக்கிய காரணம் என அந்த ஆய்வு கூறுகிறது.
உறவுக்காக உறக்கத்தைத் தொலைப்பவர்களுக்கு மத்தியில், இப்படியும் ஒரு குரூப்..