•  

கற்பை ஏலம் விட்ட பெண்!

Alina Percea
 
கலி காலம் என்பது மிகச் சரியாகத்தான் இருக்கிறது என்பார்கள் இதைப் படிப்போர். மேட்டர் நமக்கு ரொம்ப ஹாட் ஆக தெரிந்தாலும், மேற்கத்திய நாடுகளுக்கு இது சர்வ சாதாரணமான சமாச்சாராம்தான்.

கடைகளை ஏலம் விடுவார்கள், வீட்டை ஏலம் விடுவார்கள், ஏன் காந்தி போட்டிருந்த செருப்பைக் கூட சமீபத்தில் ஏலம் விட்டனர். ஆனால் கற்பை ஏலம் விடுவார்களா.. விட்டிருக்கிறார் ருமேனியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர்.

அந்த கலிகால கன்னியின் பெயர் அலினா பெர்சியா. 18 வயதாகும் இவர், ருமேனியாவின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஓல்டேனியாவில் உள்ள கரகல் என்ற நகரைச் சேர்ந்தவர். பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

தனது படிப்புச் செலவுக்காக இன்டர்நெட் மூலம் தனது கற்பை ஏலம் விட்டிருக்கிறார் இந்த இளம் பெண். எவ்வளவுக்குத் தெரியுமா.. 50 ஆயிரம் பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு.

இணையதளத்தில் தன்னைப் பற்றிய சிறு குறிப்பை வரைந்து, என்னை ஏலத்தில் எடுப்போருடன் ஒரு வார இறுதியை முழுமையாக செலவிட தயாராக இருக்கிறாராம் அலினா. தங்கும் செலவு, சுற்றிப் பார்க்க ஆகும் செலவு உள்ளிட்ட இத்யாதி செலவுகள் தனியாம் (அந்த ஊரில் வாட் வரி உண்டான்னு தெரியல..)

ஜெர்மனி மொழியில் அலினா வெளியிட்டுள்ள ஏல விளம்பரம் இப்படிப் போகிறது ..

நான் ஓல்ட் கவுன்டியைச் சேர்ந்த கரகல் நகரைச் சேர்ந்தவள். 18 வயதாகிறது. எடை 108 எல்பிஎஸ். 5.67 அடி உயரம், பிரவுன் கண்கள். ருமேனியாவைச் சேர்ந்த அழகுப் பெண்.

தம் அடிக்க மாட்டேன். நல்ல மகப்பேறு மருத்துவர் ஒருவரிடம், நான் கன்னிப் பெண்தான் என்பதற்கான சான்றிதழ் வாங்கி வைத்துள்ளேன்.

எனது முதல் உறவும், இரவும் இனிமையானதாக, சிக்கல் இல்லாத, சிறப்பான உறவாக அமைய வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

எனக்கு மரியாதை கொடுக்கக் கூடிய, தாராள மனப்பான்மை உடைய, ஜென்டில்மேனை சந்திக்க விரும்புகிறேன். பின்னாளில் அவர் எனது கணவராகக் கூடிய தகுதியுடன் இருந்தால் சந்தோஷம்.

எந்தவித கட்டுப்பாடும் இல்லாத செக்ஸுக்கு நான் தயார். ஆனால் எனது கற்பை ஏலத்தில் எடுப்பவர், நோயற்றவராக, ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும்.

அப்படி தகுதி உடையவர் கிடைத்தால் ஒரு வார இறுதியை அவருடன் முழுமையாக செலவிட நான் தயார். ஆனால் ஹோட்டல் செலவு, பயணச் செலவு உள்ளிட்டவற்றை அவர்தான் கவனித்துக் கொள்ள வேண்டும் ..

இப்படிப் போகிறது அலினாவின் விளம்பரம். 50 ஆயிரம் பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு ஏலம் கூறியிருந்தாலும், இதுவரை 5000 ஸ்டெர்லிங் அளவுக்குத்தான் ஏலம் கேட்டுள்ளனராம். இந்த ஏலம் முடிய இன்னும் 3 நாட்கள் மீதமிருக்கிறதாம்.

என்னத்தச் சொல்ல...

Get Notifications from Tamil Indiansutras