•  

ரொமான்ஸுக்கு ரெட்!

Kim Kardashian
 
தலைப்பைப் பார்த்தவுடன் டென்ஷன் வேண்டாம். சிவப்பு நிறம்தான் ரொமான்ஸுக்கு ஏற்றதாம். ஆய்வுகள் கூறுகின்றன இப்படி.

ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு பொருள் உண்டு. அந்த வகையில் ரொமான்ஸுக்கு ஏற்ற நிறம் சிவப்பு நிறமாம். பளிச்சென நமது பார்ட்னரைக் கவர ஏற்ற நிறம் சிவப்புதானாம்.

சிவப்பு ரோஜா, சிவப்பு உடைகள், சிவப்பு லிப்ஸ்டிக் என சிவப்பு மயமாக மாறினால் பார்ட்னர்களை வெகு எளிதில் ஈர்த்து விடலாமாம் பெண்கள்.

நியூயார்க்கின், ரோசெஸ்டர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின்போது சிவப்பு நிற உடை உள்பட பல்வேறு நிறத்திலான உடைகளுடன் கூடிய பெண்களின் புகைப்படங்களை ஆண்களிடம் கொடுத்து அவர்களின் கருத்தை அறிந்தனர்.

பெரும்பாலானவர்களுக்கு சிவப்பு நிற உடையில் இருந்த பெண்களைத்தான் பிடித்திருந்ததாம்.

இதன் மூலம் மற்ற நிறங்களை விட சிவப்பு நிறம்தான் ஒருவரை அதிகம் ஈர்க்கிறது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

சிம்பன்சி குரங்குகளிடம் ஒரு குணம் இருக்கிறதாம். பெண் துணைகள் 'அந்த' நேரத்தில் கிராக்கி செய்தால், அவர்களைக் கவருவதற்காகவும், ஐஸ் வைத்து 'வேலையை' முடித்துக் கொள்வதற்காகவும், தங்களது 'பின்புறத்தை', சிவப்பு நிறத்திற்கு மாற்றிக் கொள்ளுமாம். இதைப் பார்த்து பெண் துணைகள் வெட்கி, நாணி, வழிக்கு வந்து விடுமாம்.

காதலுக்கு என்றில்லாமல் மனிதனின் இயல்பான ஈர்ப்பே சிவப்பின் பக்கம்தான் அதிகம் இருக்கிறதாம். மற்ற எதையும் விட ரொமான்ஸுக்குத்தான் சிவப்பு மிக மிக உபயோகமாக இருக்கிறதாம்.

அதனால்தான் 'அந்த' ஏரியாக்களுக்கு 'ரெட் லைட்' என்று பெயர் வந்திருக்குமோ...??

Story first published: Saturday, February 28, 2009, 16:22 [IST]

Get Notifications from Tamil Indiansutras