•  

பெண்ணைப் படியுங்கள்..!

Woman
 
நம்ம ஊர் சினிமாக் கவிஞர்கள் பலரும், பெண்ணை புத்தகமாக வர்ணித்து ஏகப்பட்ட கவிதைகளை ஏக்கர் கணக்கில் எழுதியுள்ளனர். இதற்கு விமர்சனங்களும் கூட எழுந்துள்ளன.

ஆனால் நிஜமாகவே பெண் ஒரு புத்தகம்தான். அவரது முகத்தைப் பார்த்து நிறைய படிக்கலாம் என்கிறது நியூ சயின்டிஸ்ட் இதழில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வு முடிவு.

பெண்ணின் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுகளை பார்க்க முடியும். அவர் சோகமாக இருக்கிறாரா, சந்தோஷமாக இருக்கிறாரா, எதையாவது நினைத்துக் கொண்டிருக்கிறாரா, அவரை நம்பலாமா, கூடாதா, கடவுள் நம்பிக்கை கொண்டவரா .. இப்படி ஏகப்பட்ட மேட்டர்களை ஒரு பெண்ணின் முகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாமாம்.

ஆனால் ஆம்பளைஸ் முகத்தைப் பார்த்தால் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாதாம். காரணம் ஆண்களின் முகத்திற்கு இப்படி உணர்ச்சிகளை, உணர்வுகளை வெளிக்காட்டும் திறமை கிடையாதாம்.

இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக ஒரு ஆயிரம் ஆண், பெண்களை எடுத்துக் கொண்டனர். அவர்களின் புகைப்படங்களை இணையதளத்தில் இடம் பெற வைத்தனர்.

ஏற்கனவே அவர்கள் குறித்த தகவல்களை வாங்கி வைத்துக் கொண்டனர். இது தவிர புகைப்படங்களைப் பார்த்து கருத்து சொல்வோருக்காக கேள்விகளையும் தயார் செய்தனர்.

பின்னர் புகைப்படங்களை இணையதளத்தில் பிரசுரித்து, அந்தப் பெண்களின் முகங்களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேள்வி கேட்டிருந்தனர். இந்த இணையதளத்திற்கு கிட்டத்தட்ட 6500 பேர் வருகை தந்து அதில் இடம் பெற்றிருந்த பெண்களின் முகத்தைப் பார்த்து அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள், அவர்களைப் பார்த்தால் எப்படித் தோன்றுகிறது என்பதைத் தெரிவித்திருந்தனர்.

73 சதவீதம் பேர் பெண்களை அதிர்ஷ்டசாலிகள் என்று தெரிவித்தனர். 70 சதவீதம் பேர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என கூறியிருந்தனர்.

பெண்களை நம்பலாம் என கூறியிருந்தவர்கள் 54 சதவீதம் பேர்.

ஆனால் அந்தப் புகைப்படங்களுடன் இணைக்கப்பட்டிருந்த ஆண்கள் குறித்து யாருமே சரியாக கணிக்க முடியவில்லையாம்.

ஆண்களை விட பெண்களின் முகம் மிகவும் இன்ஃபர்மேட்டிவ் ஆனவை. இதனால்தான் எளிதில் அவர்களுடைய குணாதிசயங்கள் குறித்து கணிக்க முடிகிறது என்று முடிக்கிறது அந்த ஆய்வு.

எல்லாம் சரி, நாளைக்கு காலையில் நம்மை மனைவி முறைத்துப் பார்க்கும்போது 'லைட்'டாக அடிப்பாரா அல்லது துரத்தி துரத்தி அடிப்பாரா என்பதை கணி்க்க முடியுமான்னு புரிஞ்சுக்க டிரை பண்ணுவோம்..

Story first published: Monday, May 11, 2009, 17:57 [IST]
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras