கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது இங்கிலாந்து பெண்களின் நடவடிக்கைகளில் அதிக மாற்றம் காணப்படுகிறது. சமீபத்தில் அங்கு எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் அவர்கள் தாம்பத்தியம் உட்பட அனைத்திலும் தனித்து இயங்குவதிலேயே அதிக ஆர்வம் கொண்டிருப்பதாக கூறி இங்கிலாந்து ஆண்களின் வயிற்றில் வண்டி வண்டியாக ஆசிடை ஊற்றியுள்ளனர்.
கோசர்டு பிக் எம் என்ற நிறுவனம் இந்த சர்வேயை 1000 இங்கிலாந்து பெண்களிடம் எடுத்தது. அவர்கள் அனைவரும் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வேயின் முடிவில்,
இங்கிலாந்து பெண்களுக்கு ஆண்களைவிட தங்கள் மீதே அதிக மோகம் ஏற்பட்டுள்ளதாம். சர்வேயில் பங்கேற்ற பெண்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் வாரத்துக்கு நான்கு முறை தங்கள் அழகை தாங்களை தனிமையில் ஆராதனை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
அவர்களில் 92 சதவீதம் பேர் தங்களது வாழ்க்கையில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது தனிமையில் முழு சுகம் அடைந்திருப்பதாக கூறியுள்ளனர்.
இப்படி வெளிப்படையாக சொல்பவர்களின் எண்ணிக்கை கடந்த 1953ம் ஆண்டில் 62 சதவீதமாகவும், 1979ல் 74 சதவீதமாகவும் இருந்துள்ளது. விரைவில் இது 100 சதவீதமாக மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறது சர்வே.
இது குறித்து ஜெசிகா சிவர் என்ற பெண்ளுக்கான பயிற்சியாளர் கூறுகையில், தங்களை தாங்களே ஆராதிக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்ததில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவும் இல்லை. மற்ற வேலைகளில் கிடைத்துள்ள சுதந்திரம் எங்களுக்கு தனிமையையும் சுகமாக மாற்றியுள்ளது.
படுக்கையில் வாழ்க்கை துணையுடன் இருக்கும் போது ஏற்படும் புரிந்து கொள்ளாமை, தனது விருப்பம் நிறைவேறாமல் போவது போன்ற பிரச்சினைகள் இதில் இல்லை. இது எங்கள் நம்பிக்கையை அதிகரிக்கிறது. முழு திருப்தி தருகிறது என்கிறார் அவர்.