சென்னை: ஆண்களின் பாலியல் உறவை நீண்நேரம் நீடிக்க வைக்க ‛வயகரா' மாத்திரை பயன்படுகிறது. இன்னும் பலருக்கும் இந்த மாத்திரையை பயன்படுத்தலாமா? பயன்படுத்த கூடாதா? என்ற சந்தேகம் உள்ளது. மேலும் பக்கவிளைவுகள் ஏதேனும் வருமா? என்ற அச்சம் பலரிடமும் இருக்கும். இதுபற்றி இங்கு பார்க்கலாம்.
இல்லற வாழ்க்கையில் மனைவி- கணவனை நெருக்கமாக்குவது தாம்பத்தியம் தான். இந்த தாம்பத்திய உறவு சிறப்பாக அமைந்தால் கணவன் - மனைவி இடையே பிரச்சனைகள் வருவதும் படிப்படியாக குறைந்து விடும். இருப்பினும் மனைவயால் கணவனின் எதிர்ப்பார்ப்பையும், கணவனால் மனைவியின் எதிர்பார்ப்பையும் அனைவராலும் பூர்த்தி செய்ய முடியுமா? என்றால் அது கேள்வி குறிதான்.

இதில் பல ஆண்கள், பல பெண்கள் தோற்றுப்போகிறார்கள். குறிப்பாக மனைவியை கட்டிலில் திருப்திப்படுத்த முடியாமல் பல ஆண்கள் கவலைப்படலாம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. உடனடியாக விந்து வெளியேறுதல், ஆண்மை குறைபாடு, பயம், பதற்றம், முன்விளையாட்டுகளை கைவிடுதல், செக்ஸில் ஆர்வம் காட்டாதது என்று பல விஷயங்களை கூறலாம்.
வயகரா மாத்திரையை ஒரு ஆண் எடுத்து கொள்ளும்பபோது அவரது ஆணுறுப்பு விறைப்பு தன்மை பெற்று நீண்டநேர பாலியல் உறவுக்கு உதவும். இந்த மாத்திரையை உட்கொள்ளும்போது ஆணுறுப்புக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது விறைப்பு தன்மையை அதிகரிக்கும். இதனால் வயதானவர்கள் அவ்வப்போது இந்த மாத்திரையை எடுத்து தாம்பத்திய உறவில் இனிமை கண்டு வருகின்றனர்.
இப்போது இளம் வயதிலேயே பல ஆண்கள் விறைப்பு தன்மை குறைபாடு, விந்தணு குறைபாட்டால் தவிக்கின்றனர். இவர்கள் வயாக்ரா மாத்திரையை எடுத்து கொள்ளலாமா? வேண்டாமா? என்ற சந்தேகத்தில் உள்ளனர். உண்மையில் இவர்களும் வயகரா மாத்திரையை எடுத்து கொள்ளலாம். ஆனால் அதற்கு முன்பாக உரிய முறையில் டாக்டரை அணுகி அவரது அறிவுரைப்படி இந்த மாத்திரையை எடுத்து கொள்ளலாம்.
மாறாக கண்பாதிப்பு, ரத்தம் சம்பந்தப்பட்ட பாதிப்பு, அலர்ஜி பாதிப்பு உள்ளவர்கள் இந்த மாத்திரையை எடுத்து கொள்ள வேண்டாம் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் உடலில் குறைபாடு இல்லாமல் வயகரா சாப்பிட்டால் ஆணுறுப்பு விறைப்பு தன்மையுடன் இருக்கும் என்ற ஒரு காரணத்துக்காக என்றே நீண்டநேர செக்ஸ் உறவுக்காக மட்டும் டாக்டரிடம் கேட்காமல் வயகரா எடுத்து கொள்வது ஆபத்தானது.
ஏனென்றால் இளம்வயதில் இந்த மாத்திரை எடுத்துவிட்டு அதன்பிறகு அதனை கைவிட்டு உடலுறவு வைக்கும்போது ‛கான்பிடென்ட்' குறைய வாய்ப்புள்ளது என்கின்றனர் டாக்டர்கள்.



Click it and Unblock the Notifications



