டோக்கியோ: ஜப்பானில் குழந்தை இன்றி தவிக்கும் நண்பர்களின் மனைவி, தன்பாலின பெண் ஈர்ப்பாளர்கள், திருமணம் செய்து கொள்ளாத பெண்களுடன் உடலுறவு வைத்து அவர்களை கர்ப்பமாக்குவதை 38 வயது நிரம்பிய இளைஞர் சமூக சேவையாக செய்து வருகிறார். இதுதொடர்பாக விரிவாக இங்கு பார்க்கலாம்.
ஜப்பானின் ஹொன்சு பகுதியில் உள்ள ஒசாகா நகரை சேர்ந்தவர் 38 வயது நபர். இவரது புனைப்பெயர் ஹாஜிமே. இவர் தனியார் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பல்கலைக்கழகத்தில் பயின்றார். அப்போது நெருங்கிய நண்பர் ஒருவர் அவரிடம் வினோதமான கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார்.

அந்த நண்பர் திருமணம் ஆனவர். மனைவியுடன் வசித்து வருகிறார். ஆனாலும் அவரால் தனது மனைவியை கர்ப்பிணியாக்க முடியவில்லை. மருத்துவு பரிசோதனையில் அவருக்கு விந்தணு குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது.
நண்பனின் மனைவியுடன் உடலுறவு
இதனால் ஹாஜிமேயிடம் அவரது நண்பர், ‛‛என்னால் எனது மனைவியை கர்ப்பமாக்க முடியவில்லை. இதுபற்றி வெளியே சொல்ல தைரியம் இல்லை. வெளியே தெரிந்தால் பலரும் என்னை தவறாக நினைப்பார்கள். இதனால் என் மனைவியை கர்ப்பமாக்க வேண்டும். அதற்கு உதவ வேண்டும். என் மனைவியுடன் உடலுறவு கொண்டு கர்ப்பமாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். என்றும் அதனால் தனது மனைவியுடன் உடலுறவு கொண்டு அவரை கர்ப்பமாக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
குழந்தை பிறந்தது
முதலில் ஹாஜிமே தயங்கினார். நண்பனின் மனைவியுடன் உடலுறவு வைப்பதா என்று நினைத்து மறுத்துள்ளார். ஆனாலும் அவரை அவரது நண்பர் விடவில்லை. இதனால் இறுதியாக ஒப்புக்கொண்டார். ஹாஜிமே அவனது நண்பரின் மனைவிக்கு உடலுறவு வைத்து விந்தணு தனம் அளித்தார். இதில் அவரது நண்பரின் மனைவி கர்ப்பிணியானார். தற்போது அந்த ஜோடி குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
திருமணமாகாத பெண்ணுடன் உறவு
இந்த சம்பவமே ஹாஜிமேவுக்கு பெரும் ஊக்கத்தை கொடுத்துள்ளது. இதனால் குழந்தையின்றி தவிக்கும் பெண்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவர் முடிவு செய்துள்ளார். அதன்படி கருத்தரிப்பதில் சிக்கல் இருக்கும் ஆண் - பெண் ஜோடிக்கு ஹாஜிமே உதவி வந்திருக்கிறார். பிறகு ஹாஜிமே தன்பால் ஈர்ப்பாளர்களாக இருக்கும் பெண்கள் மற்றும் திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து வாழும் பெண்களுக்கும் விந்தணு தானம் அளித்துள்ளார்.
உடலுறவுக்கு வந்த 20 அழைப்புகள்
ஜப்பானில் திருமணமாகாதவர்களுக்கும், தன்பால் ஈர்ப்பாளர்களுக்கும் குழந்தை பெற செயற்கைக் கருத்தரித்தல், செயற்கைக் கருவூட்டல் ஆகிய சிகிச்சைகளுக்கு அனுமதி கிடையாது. இந்தச் சூழலில், ஹாஜிமேவின் சேவைதான் அவர்களுக்கு நம்பிக்கையை அளித்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வரை தனது மனைவியை கர்ப்பமாக்க வேண்டும். தன்னை கர்ப்பமாக்க வேண்டும் என்று ஆண், பெண்களிடம் இருந்து அவருக்கு 20 போன்கால்கள் வந்துள்ளது.
7 பெண்களை கர்ப்பமாக்கிய ஹாஜிமே
இதில் ஹாஜிமே அந்த பெண்களுடன் உடலுறவு வைத்து விந்தணு தானம் செய்துள்ளார். தற்போது வரை 7 பேர் கர்ப்பமானதாகவும், அதில் 4 குழந்தைகள் பிறந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை சமூக சேவையாக இப்போது செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதை தான் பணத்திற்காக மட்டும் தொடர்ந்து செய்யவில்லை என்றும் தன்னுடைய வாடிக்கையாளர்கள் கர்ப்பமடைவதன் மூலம் தனக்கு மகிழ்ச்சியும், மன நிம்மதியும் ஏற்படுவதாலேயே இதை தொடர்ந்து செய்வதாக கூறினார். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில், ‛‛என்னை தேடி வருவோர் குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்பது தான் எனது எண்ணம். அவர்களுக்கு குழந்தை பிறப்பதை பார்க்கும்போது சமூகத்துக்கு நல்லது செய்த மனநிறைவு கிடைக்கிறது'' என தெரிவித்துள்ளார்.
தனக்கு தானே விளம்பரம்
ஜப்பானை பொறுத்தவரை தனியார் விந்தணு தானம் என்பது மிகவும் எளிதாகிவிட்டது. ஒரு ஆண் தனது விந்தணு தானம் சேவை குறித்து தானே விளம்பரம் செய்துகொள்ளலாம், எந்த விதிமுறைகளையும் மீறாமல் தனிப்பட்ட முறையில் விந்தணு தானமும் செய்துகொள்ளலாம். இருப்பினும், இந்த விஷயத்தில் போதுமான ஒழுங்குமுறை இல்லாமல் இருப்பது எதிர்காலத்தில் சட்ட அல்லது மருத்துவ அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் வல்லுநர்களால் எச்சரிக்கப்படுகிறது. குறிப்பாக குழந்தையின் பாதுகாப்பு, மருத்துவப் பரிசோதனைகள் போன்ற சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஹாஜிமேவும் தனது விந்தணு தானம் குறித்து தொடர்ந்து விளம்பரம் செய்து வருகிறார். மேலும் தனக்கு தொற்று நோய் ஏதும் இல்லை என்பதை வாடிக்கையாளர்களுக்கு நிரூபிக்கும் வண்ணம் ஹாஜிமே அந்த பரிசோதனையை அடிக்கடி மேற்கொண்டு, அதன் முடிவுகளை இணையத்தில் பதிவிடுகிறார். இதனால் அவர் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.



Click it and Unblock the Notifications



