லண்டன்: வேலை வேலை என்று எப்போது பார்த்தாலும் வேலையில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு செக்ஸ் ஆசை என்பது குறைவாகத்தான் இருக்குமாம்.. அதேசமயம், அவர்கள் அந்த வேலையில் இறங்கி விட்டால் சும்மா புலிப் பாய்ச்சல்தானாம்.. பிரமாதமாக செயல்படுவார்களாம்..
இதை நாம் சொல்லவில்லை. ஒரு ஆய்வு சொல்கிறது. அதிக அளவில் வருவாய் ஈட்டுவோருக்கு செக்ஸ் வைத்துக் கொள்ளும் நேரம் குறைவாக இருக்கிரதாம். ஆனால் கிடைக்கும் நேரத்தில் அவர்கள் பிரமாதமாக செயல்படுவார்களாம்.
ஆனால் அதிக அளவில் வருவாய் ஈட்டுவோர் காசு, பணம், துட்டு, மணி மணி என்று அலைந்து கடைசியில் அதை இழந்து அதாவது சுகமான காதல் வாழ்க்கையை, செக்ஸ் வாழ்க்கையை இழந்து கஷ்டப்படுகிறார்கள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
டெய்லி ... 4 பர்சன்ட்தான்
இப்படிப்பட்ட வருவாய் ஈட்டுவோரில் தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வோரின் எண்ணிக்கை ஜஸ்ட் 4 சதவீதம்தானாம். அதுவே குறைந்த அளவில் சம்பாதிப்போரின் அளவானது 12 சதவீதமாக உள்ளது.
வாரத்திற்கு ஒருவாட்டி
மூன்றில் ஒரு பங்குப் பேர் வாரத்திற்கு ஒருமுறைதான் கட்டில் பக்கம் எட்டிப் பார்க்கிறார்களாம். அதுவே குறைந்த வருவாய் ஈட்டுவோர் விஷயத்தில் அது 17 சதவீதமாக உள்ளது.
ஆனால் வேலையில் கில்லாடி பாஸ்...
ஆனால் அதிக அளவில் வருவாய் ஈட்டுவோர் செக்ஸ் வைத்துக் கொள்வதில் வேண்டுமானால் சுணக்கம் காட்டலாமாம். அதேசமயத்தில் இறங்கி விட்டால் ரசித்தும், புதுப் புது வியங்களைப் பரீட்சித்தும் அட்வென்ச்சரஸாக அதை மாற்றி விடுவார்களாம்... அதாவது கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல.
வாரத்திற்கு பலமுறை.. இது தனி கோஷ்டி
ஓரளவு மிதமான சம்பளம் வாங்குவோரில் 54 சதவீதம் பேர் வாரத்திற்கு பலமுறை செக்ஸ் வைத்துக் கொள்கிறார்களாம்.
லவ் ஹனி..
லவ்ஹனி என்ற நிறுவனம்தான் இந்த ஆய்வை நடத்தியது. இதன் முடிவுகளை அது இணையதளத்தில் போட்டுள்ளது.