•  

அந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ?

பெண்கள் மனதில் என்னதான் இருக்கிறது என்பதை யாராலும் அறியமுடியாது. அதனால்தான் கடலின் ஆழத்தை அறிந்து விடலாம், ஆனால் பெண்ணின் மனதை புரிந்து கொள்ள முடியாது என்று ஒரு பழமொழியே உள்ளது. அது கிட்டத்தட்ட உண்மை என்று கூடச் சொல்லலாம்.ஆனால் தாம்பத்ய உறவின் போது ஒரு பெண் உச்சகட்ட நிலையில் என்ன நினைத்துக் கொண்டிருப்பார் என்பதையும், அவரது மூளையின் உணர்வுகளையும் அறியலாம் என அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.ஆர்கஸத்தின்போது பெண்களின் மூளை எதை யோசித்துக் கொண்டிருக்கும் என்பதை ஸ்கேனிங் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்று இதுகுறித்து ஆய்வை மேற்கொண்ட ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.எம்.ஆர்.ஐ ஸ்கேன்

எம்.ஆர்.ஐ ஸ்கேன்

இந்த ஆய்வுக்காக எட்டு பெண்களைத் தேர்வு செய்து அவர்களை மூளைக் கட்டிகளை கண்டறியப் பயன்படுத்தப்படும் எம்ஆர்ஐ ஸ்கேனரில் படுக்க வைத்து அவர்கள் மீது போர்வையைக் கொண்டு மூடி பின்னர் அந்தப் பெண்களிடம் ஸ்டிமுலேட்டரைக் கொடுத்து செக்ஸ் உணர்வுக்கு வரவைத்துள்ளனர்.

மூளையின் உணர்ச்சி

மூளையின் உணர்ச்சி

சில பெண்களுக்கு ஐந்து நிமிடத்திற்குள்ளாகவே ஆர்கஸம் ஏற்பட்டது. சிலருக்கு 20 நிமிடம் வரை ஆனது.அந்த சமயத்தில், அவர்களின் மூளை செயல்பாடுகளை ஸ்கேனர் மூலம் ஆய்வு செய்தனர் ஆய்வாளர்கள்.

ஆர்கஸத்தின்போது ஒவ்வொரு இரண்டு விநாடிக்கு ஒருமுறை எந்த பகுதி ஆக்டிவாக இருக்கிறது என்பதை ஆராய்ந்து படமாக எடுத்துள்ளனர்.

 

 

நரம்பு மண்டலம்

நரம்பு மண்டலம்

செக்ஸ் உறவின்போது, குறிப்பாக செக்ஸ் உணர்வுகள் உச்சத்தை அடையும்போது பெண்களின் நரம்பு மண்டலம் வழக்கத்தை விட அதி வேகத்தில் துடிக்கும். ஆர்கஸத்தின்போது எந்தப் பெண்ணுமே இந்த நரம்பு மண்டலத் துடிப்பை உணர்வதில்லை

மகிழ்ச்சியான உணர்வு

மகிழ்ச்சியான உணர்வு

செக்ஸ் அல்லாத சமயத்தில் இதுபோல நடந்தால் பெரும் வலியை உணர நேரிடும். ஆனால் செக்ஸின்போது இது தூண்டப்படுவதால் வலிக்குப் பதில் மகிழ்ச்சி உணர்வுதான் கூடும்.

மூளையின் 30 பகுதிகள்

மூளையின் 30 பகுதிகள்

ஆர்கஸத்தின்போது பெண்களின் மூளையின் 30 பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக உணர்ச்சி, தொடுதல், மகிழ்ச்சி, திருப்தி, நினைவு ஆகிய செயல்களை கட்டுப்படுத்தும் பகுதிகள் இதில் முக்கியமானவை.

மூளை சுறுசுறுப்பு

மூளை சுறுசுறுப்பு

ஆர்கஸத்திற்கு 2 நிமிடங்களுக்கு முன்பு உணவு சாப்பிடுவது, மது அருந்துவது போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் மூளைப் பகுதி ஆக்டிவாக இருந்தது தெரியவந்தது.

உணர்ச்சி தூண்டுதல்

உணர்ச்சி தூண்டுதல்

ஆர்கஸம் தொடங்கியவுடனேயே உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதிகள் தூண்டுவிக்கப்பட்டதை அறிய முடிந்தது. பெண்கள் ஆர்கஸத்தை எட்டிய சில விநாடிகளிலேயே தொடுதல் உணர்வைக் கட்டுப்படுத்தும் பகுதிகள், உடலுக்கு சிக்னல்களை கடத்தும் தலாமஸ் போன்றவை பாதிக்கப்பட்டதை அறிய முடிந்தது.

தூண்டப்பட்ட மகிழ்ச்சி

தூண்டப்பட்ட மகிழ்ச்சி

ஆர்கஸத்தின்போது நினைவை கட்டுப்படுத்தக் கூடிய காடேட் நியூக்ளியஸ், நியூக்ளியஸ் அக்கும்பென்ஸ் (இது மகிழ்ச்சியை தூண்டும் பகுதி) ஆகியவையும் தூண்டப்பட்டதை அறிய முடிந்தது.

மூளையின் கட்டுப்பாட்டு பகுதி

மூளையின் கட்டுப்பாட்டு பகுதி

கடைசியாகத்தான் உடல் சூடு, பசி, தாகம், சோர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மூளையின் கட்டுப்பாட்டுப் பகுதி அமைந்துள்ள ஹைபோதலாமஸ் தூண்டப்பட்டது.

அதிக ஆர்கஸம்

அதிக ஆர்கஸம்

இந்த ஆய்வின்போது ஆர்கஸத்தை சந்தித்த பெண்கள் பலமுறை கைகளை மேல உயர்த்தியதாக ஆய்வளர்கள் தெரிவித்தனர். இதன் மூலம் அவர்கள் அதிக அளவிலான ஆர்கஸத்தை விரும்புவதை உணர முடிந்தது. மேலும் ஆர்கஸம் நீண்ட நேரம் நீடிப்பதையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதையும் அறிய முடிந்தது. மேலும் தொடர்ச்சியான ஆர்கஸத்தை பெண்கள் வரவேற்பதையும் உணர முடிந்தது என்றனர்.

பெண்களுக்கு அதிகம்

பெண்களுக்கு அதிகம்

வழக்கமாக பெண்களுக்கு சராசரியாக 10 முதல் 15 விநாடிகள் வரை உச்ச நிலை நீடிக்கும். அதேசமயம், ஆண்களுக்கு இது 6 விநாடிகளிலேயே முடிந்து போய் விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

English summary
Sneak-a-peek inside a woman's brain while she is having orgasm would now be possible, thanks to a scan developed by American scientists.Rutgers University researchers have discovered that sexual arousal numbs the female nervous system to such an extent that she doesn’t feel as much pain—only pleasure. Orgasm affects up to 30 different parts of the brain including those responsible for emotion, touch, joy, satisfaction and memory, found researchers.
Story first published: Friday, September 20, 2013, 11:53 [IST]
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more