•  

செக்ஸ் அடிமை என்பது உண்மையல்ல… ஆய்வில் தகவல்

செக்ஸ் அடிமை என்ற வார்த்தையே உண்மையானதல்ல.... அது கூடுதலான உணர்வுதான் என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது.இயல்பை விட கூடுதலாக செக்ஸ் பற்றி நினைப்பவர்களும், பேசுபவர்களும் இருக்கின்றனர். சிலர் செக்ஸுக்கு அடிமையாகி விட்டதாக நினைக்கின்றனர்.உண்மையில் அதீதமான செக்ஸ் உணர்வுகளைக் கொண்டவர்களாக இருக்க முடியுமே தவிர செக்ஸுக்கு அடிமையானவர்களாக அவர்கள் இருக்க முடியாது என்றும் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வு கூறுகிறது.கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு இந்த சர்வேயை எடுத்துள்ளது. இந்த ஆய்வுக்காக 39 ஆண்களையும், 13 பெண்களையும் சோதனைக்குட்படுத்தினர். இவர்கள் அதிக அளவில் செக்ஸுக்கு அடிமையானவர்கள் என்று கூறப்பட்டவர்கள் ஆவர்உடல் ரீதியான கோளாறு

உடல் ரீதியான கோளாறு

இவர்களிடம் செக்ஸ் பழக்க வழக்கங்கள், செக்ஸ் விருப்பம், செக்ஸ் கட்டாயம், செக்ஸ் நடத்தையால் ஏற்படும் விளைவுகள் உள்ளிட்டவை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், உடல் ரீதியான கோளாறு காரணமாக இந்த செக்ஸ் அடிமை என்பது இருக்க முடியாது என்று கண்டறியப்பட்டது.

கூடுதலான உணர்வு

கூடுதலான உணர்வு

மாறாக, அதீதமான, வழக்கமான அளவை விட அதிக அளவிலான செக்ஸ் விருப்பங்கள், ஆர்வங்கள் இருக்க முடியுமே தவிர அதை அடிமை என்று சொல்ல முடியாது என்று இவர்கள் சொல்கிறார்கள்.

மூளையின் அதிர்வுகள்

மூளையின் அதிர்வுகள்

இவர்கள் கொடுத்த பதிலை வைத்து இயல்பான செக்ஸ் விருப்பங்களைக் கொண்டவர்களின் நிலையுடன் ஒப்பீடு செய்து பார்க்கப்பட்டது. மேலும் இரு தரப்பினரின் நரம்பியல் நிலையும், இஇஜி மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் மூளையின் அதிர்வுகள் கணக்கிடப்பட்டன.

நார்மல்தான்

நார்மல்தான்

இந்த ஆய்வின்போது செக்ஸ் அடிமைகள் என்று கூறப்பட்டவர்களிடம் அதற்கான அறிகுறியே தெரியவில்லை என்று கண்டுபிடிக்கப்ட்டதாம். அதாவது சாதாரண செக்ஸ் பழக்க வழக்கங்களைக் கொண்டவர்களுக்கு இருப்பது போலத்தான் இவர்களின் மூளை அதிர்வுகளும் இருந்ததாம்.

செக்ஸ் அடிமை கிடையாது

செக்ஸ் அடிமை கிடையாது

அதேசமயம், இயல்பானவர்களை விட செக்ஸ் விருப்பம் அதிகம் உள்ளவர்களாக மட்டுமே இவர்கள் இருந்துள்ளனர். இதை வைத்து, உண்மையில் செக்ஸ் அடிமை என்பதெல்லாம் கிடையாது. மாறாக, செக்ஸ் விருப்பங்கள், ஆர்வம் அதிகம் இருக்கிறது என்பதுதான் உண்மை என்ற முடிவுக்கு இவர்கள் வந்துள்ளனராம்.

 English summary
A small, preliminary new US study finds that people who think they are sex addicts may actually just have heightened libidos. Researchers from the University of California, Los Angeles, suggest that "sex addition" may not be a physiological disorder after all, but a high sexual desire.
Story first published: Thursday, September 12, 2013, 12:34 [IST]
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras