•  

மூக்குத்தி பூமேலே...!

சென்னை: ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம்... உள்ளுக்குள் தகித்தபடி இருக்கும்... காமசூத்ராவின் அடிப்படை விஷயமே.. சின்னச் சின்ன ஆசைக்கும் பெரிய பெரிய பலன்கள் கிடைக்கும் என்பதுதான்.காமத்தைக் கலை என்று சொல்வதற்குக் கூட இந்த அழகியல் உணர்ச்சிதான் காரணம்.. சின்ன விஷயமாக இருந்தாலும் அதை லயித்துப் போய், ரசித்துப் பார்த்து, இன்பத்தை சிலாகிக்கும் வித்தை எல்லோருக்கும் வராது.. அப்படி வரப் பெற்றவர்களுக்குத்தான் காமமும் கலையாக வாய்க்கிறது.ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி காமத்தில் மூழ்கும்போது அவரவர் ரசிக்கும் விஷயத்தை பட்டியலிட்டால் பெரிய்ய்ய் லிஸ்ஸ்டாக அது நீளும்.அந்த வகையில் பெண்களிடத்தில் ஆண்களுக்குப் பிடித்த விஷயங்களில் ஒன்றாக விளங்கும் மூக்கைப் பற்றி இங்கு பார்க்கலாம்...மூக்கின் மீது 'மூட்'...!

மூக்கின் மீது 'மூட்'...!

மூக்கில் என்ன ரசிக்க இருக்கிறது என்பார்கள் விவரம் புரியாதவர்கள்.. நிறைய இருக்கிறது.. ஒரு பெண் என்ன மாதிரியான மூடில் இருக்கிறார் என்பதை மூக்கைப் பார்த்தும் அறியலாம்.. மேலும் மூக்கில் காம உணர்வுகளைத் தூண்டும் நிறைய ஐட்டங்களும் இருக்காம்...

காமனின் கனையோ...

காமனின் கனையோ...

உள்ளுக்குள் உணர்வுகள் உந்தித் தள்ளும்போது, உள்ளம் துள்ளும்போது பெண்களுக்கு மூக்கு நன்கு விரியுமாம். முன் விளையாட்டின்போது அதை பார்த்து ரசிக்க முடியும். உணர்வுகளுக்குள் மூழ்கி அவர் நீந்தத் தொடங்க விட்டார் என்பதை மூக்கின் விரிவை வைத்து அறியலாமாம். நன்கு விடைத்து விரிந்து சுருங்கும் மூக்கைப் பார்த்தாலே... ஆள் ரெடியாகி விட்டார் என்பதை உணரலாமாம்.

அழகின் அழகு...

அழகின் அழகு...

மூக்கின் அழகை ரசிப்போர் ஏராளம் ஏராளம்... காரணம், சிலரது மூக்கு அவ்வளவு அழகாக இருக்கும்... அழகாக வளைந்து, கூர்மையாக முடிந்து, வனப்போடு காணப்படும் எந்த மூக்கையுமே ரசிக்காமல் இருக்க முடியாதுதானே... அதிலும் சின்னதாக ஒரு மூக்குத்தி ஒய்யாரமாக உட்கார்ந்திருக்கும் அழகு மூக்கை எப்படி ரசிக்காமல் இருக்க முடியும்.. பார்த்துப் பார்த்து ரசிக்கும்போதே மனதுக்குள் பட்டாம் பூச்சிகள் பல ஆயிரக்கணக்கில் படபடக்கும் உணர்வைப் பெற முடியுமாம்.

முத்தம் தரவா.. உன் சின்ன மூக்குக்கு

முத்தம் தரவா.. உன் சின்ன மூக்குக்கு

அருகில் அமர வைத்துக் கொண்டு, அந்த அழகான மூக்கையும், அது விரிந்து சுருங்கி படபடக்கும் அழகையும் பார்க்கும்போது எழுதப் படிக்கத் தெரியாதவனுக்கும் கூட கவிதை வருமாம்... அழகாக சின்னதாக அந்த மூக்கில் முத்தம் கொடுக்கும்போது, கூரிய நுனியில் இதழ்களால் வருடும்போது, கொஞ்சிக் குலாவும்போது... கிடைக்கும் இன்பமே தனி..

நீள மூக்குக்கு உணர்ச்சி அதிகம்

நீள மூக்குக்கு உணர்ச்சி அதிகம்

நீளமான மூக்கைக் கொண்டிருப்பவர்களுக்கு செக்ஸ் உணர்ச்சி அதிகம் இருக்குமாம். இவர்கள் தங்களது செக்ஸ் தேவைகளை உரியவர்களிடம் வெளிப்படையாக கேட்பதில் தயக்கம் காட்ட மாடடார்களாம்.

மனதைக் கவரும் மூக்கு...

மனதைக் கவரும் மூக்கு...

ஆண்கள் ஒரு பெண்ணைப் பார்க்கும்போது அவர்களது முதல் பார்வையில் படும் உறுப்புகளில் முக்கிய இடத்தில் இருப்பது மூக்கும்தானாம். அழகான, வனப்பான மூக்குடன் உள்ள பெண்கள் ஆண்களின் மனதில் உடனே இடம் பிடித்து விடுகிறார்களாம்.

உணர்ச்சிகளின் நுனி...

உணர்ச்சிகளின் நுனி...

உறவுகளின்போது மூக்கின் மீது முத்தமிட்டும், நாவுகளால் வருடியும், கை விரல்களால் பிடித்தும் விளையாடும் ஒரு உறுப்பு மூக்குதான். அதிலும் மூக்குக்கு முத்தம் கொடுக்கும்போது பெண்கள் அதை ரசிப்பதும், வெட்கத்திலும், உணர்ச்சியிலும் நெளியும்போது பார்க்க வேண்டுமே அந்த முகத்தை... ப்யூட்டிபுல்.

சும்மா பாருங்க...

சும்மா பாருங்க...

அழகான மூக்கு கொண்டிருப்பவர்களிடம் நெருங்கி உட்கார்ந்து... வெறுமேன அந்த மூக்கு நுனியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாலே கூட அவர்களுக்கு உணர்வுகள் பெருக்கெடுக்குமாம். மேலும் கிட்ட நெருங்கி மூக்குக்கு அருகில் உதடுகளை கொண்டு சென்று சின்னதாக முத்தம் கொடுப்பது போல நெருங்கினாலே கூட உணர்வுகள் பற்றிக் கொள்ளுமாம்....

விரலால் விளையாடலாம்...

விரலால் விளையாடலாம்...

மூக்கிலும் கூட நிறைய விளையாடலாம்... ஒற்றை விரல் எடுத்து.. மூக்கின் உச்சியில் தொடங்கி... சின்னதாக கோடு போட்டபடி மேலிருந்து கீழ் நோக்கி.. மையத்தில் சற்றே நிறுத்தி.. வலது பக்கம் கொஞ்ச நேரம்.. இடது பக்கம் கொஞ்ச நேரம்.. விரலை விளையாட விட்டு.. பின்னர் சற்றே கீழிறங்கி மூக்கின் எல்லைகளில் விரல்களால் நிமிண்டியபடி... துவராங்களில் விரலை செலுத்தி.. அப்படியே கீழிறங்கி... செல்லமாக பிடித்து விட்டு... பாருங்கள்... உங்கள் துணை எப்படி நெளிகிறார் என்று...

ஆசை வரும்போது இப்படித்தான் செய்ய வேண்டும் என்று எந்த காமசூத்திரத்திலும் சொல்லப்படவில்லை.. எப்படியும் செய்யலாம், இன்பம் கிடைத்தால் போதும்.. இதுதான் காமசூத்திராவின் அடிப்படை மந்திரமும் கூட.

விளையாடிப் பாருங்கள்.

 

 

 English summary
Men are celebrating beautiful women with cutre noses. Too often it seems that girls with prominent noses are made to feel ugly just because they don't conform to our society's ideal of beauty. This ideal seems to favor blandness over uniqueness. Women with beautiful noses, aren't afraid to look different, in fact it's their distinctiveness that makes them beautiful!
Story first published: Thursday, September 5, 2013, 15:35 [IST]
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras