•  

எப்போதும் இணைந்திருங்கள்… வாழ்க்கை போரடிக்காது!

செக்ஸ் வாழ்க்கை ஏதாவது ஒரு கட்டத்தில் பலருக்கும் போரடித்துப் போய் விடத்தான் செய்கிறது. திரும்பத் திரும்ப அதேதானே என்ற சலிப்பும் எட்டிப் பார்த்து விடுகிறது. துணைகளில் யாராவது ஒருவருக்கு இந்த எண்ணம் வந்தால் கூட மற்றவரையும் அது பாதித்து விடுகிறது. போரடித்துப் போயிருக்கும் துணையை சமாளித்து சரிக் கட்டுவதற்குள் போதும் போதுமென்றாகி விடும்.எல்லோருக்குமே இப்படிப்பட்ட பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அதற்காக பயந்து விடத் தேவையில்லை. மாறாக சின்னச் சின்னதாக சில புதுப்பித்தல்களை செய்தாலே இதை சரி செய்து விடலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.படுக்கை அறையில் நமது துணைக்கு என்ன தேவைப்படுகிறது என்பதை சரியாக புரிந்து கொண்டாலே பாதிப் பிரச்சினை தீர்ந்து விடுமாம். எல்லாமே நமது கையில்தான் உள்ளது. சரியாக புரிந்து கொண்டு உரிய முறையில் அணுகினாலே பிரச்சினை சரியாகி விடுமாம்.ஆரம்ப கால அற்புதம்

ஆரம்ப கால அற்புதம்

உறவுக்குள் நுழையும் அந்த ஆரம்ப காலத்தில் இருவருக்குமே வேகம் இருக்கும். புதிது புதிதாக கண்டுபிடித்து இன்பங்களை வெளிக் கொண்டு வந்து நுகர இருவருமே துடிப்பார்கள். தேடித் தேடிக் கண்டுபிடித்து இன்புறுவார்கள்.

ஹனிமூனுக்குப் பிறகும்

ஹனிமூனுக்குப் பிறகும்

ஹனிமூனுக்குப் பிறகும் கூட பலருக்கு இந்த வேட்கை அடங்காமல் இருக்கும். அப்படி இருப்பதுதான் ஆரோக்கியமானதும் கூட. அந்த உறவுதான் நீடித்து நிலைத்திருக்குமாம்.

கற்பனையை புகுத்துங்கள்

கற்பனையை புகுத்துங்கள்

நாளாக நாளாக உறவு போரடிக்க காரணம் அரைத்த மாவையே அரைப்பதுதான். எனவே கற்பனைத் திறனைபுதிது புதிதாக கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும். புதியவைகளை அறிமுகப்படுத்தி இன்பத்தைக் கூட்ட முயற்சிக்க வேண்டும்.

வேடிக்கை விளையாட்டுக்கள்

வேடிக்கை விளையாட்டுக்கள்

இருவருமே எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேடிக்கையான சில்மிஷமான விளையாட்டுக்கள் அவசியம். நாட்டியாக விளையாடுங்கள். வெட்கத்தை ஓரம் கட்டி விட்டுவிளையாடுங்கள்.

செக்ஸியான பேச்சுக்கள்

செக்ஸியான பேச்சுக்கள்

தம்பதியரிடையேயான செக்ஸியான பேச்சுகள் உற்சாகம் தரக்கூயைவைதான். எனவே அன்றைக்கு இரவு உறவுக்கு தயார் படுத்த காலையில் இருந்தே உற்சாகம் தரக்கூடிய பேச்சுக்களை பேசலாம்.

ரொமான்டிக் படம்

ரொமான்டிக் படம்

படுக்கை அறையில் செக்ஸ் மட்டும்தான் என்றில்லை. காதல், காமம் இணைந்த ரொமான்டிக்கான படங்களைப் போட்டு இருவரும் சேர்ந்து பார்க்கலாம். படம் பார்க்கும் சாக்கில் விரல்களால், கைகளால் விளையாடலாம். முத்தம் கொடுக்கலாம். தித்திக்கும் இன்ப விஷயங்களில் ஈடுபடலாம்.

தொட்டால் ஷாக் அடிக்கனும்

தொட்டால் ஷாக் அடிக்கனும்

எந்த இடத்தில் தொட்டால் எப்படி இன்பம் கிடைக்கும் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டு துணையை துள்ள விடலாம். மறைவான இடங்களில் உங்கள் முகம் புதைத்து சில்மிஷம் செய்யலாம். இதெல்லாம் உங்கள் மீதான ஈர்ப்பை அதிகரிக்க வைக்கும்.

எப்போதும் இணைந்திருங்கள்

எப்போதும் இணைந்திருங்கள்

ஆணும் சரி பெண்ணும் சரி, உடல் ரீதியான ஈர்ப்பு குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பொதுவான நேரத்திலும் கூட ஈர்ப்புக்குள் இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். மனைவி அல்லது துணை சமையல் செய்கிறாரா.. பின்னாடியே போய் சுற்றிக் கொண்டிருங்கள். பின்னாலிருந்து கட்டிப்பிடியுங்கள். சின்னச் சின்னதாக ரொமான்ஸ் செய்யலாம்.

கேட்டால் கொடுங்கள்

கேட்டால் கொடுங்கள்

உங்கள் துணைக்கு எப்போது மூடு வருகிறதோ, அப்போது நீங்கள் அதை நிறைவேற்ற முயற்சியுங்கள். உங்களுக்கு மூடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை முடிந்தவரை சந்தோஷப்படுத்த முயற்சியுங்கள். முடியாது என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்.

ஆசையை நிராகரிக்காதீர்கள்

ஆசையை நிராகரிக்காதீர்கள்

அவரது சின்னச் சின்ன ஆசையை நிறைவேற்றுங்கள். முத்தம் கொடுத்துக் கொண்டே இரு என்று சொன்னால் செய்து கொண்டே இருங்கள். இப்படிக் கட்டிப்பிடி என்றால் கட்டிப்பிடியுங்கள். இங்கெல்லாம் விளையாடு என்று சொன்னால் அங்கெல்லாம் தவறாமல் விளையாடுங்கள். அவர் இழுத்த இழுப்புக்குப் போய்த்தான் பாருங்களேன்.. காசா, பணமா.

எப்போதும் சந்தோஷம்

எப்போதும் சந்தோஷம்

நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா என்பதை விட உங்கள் மீது அன்பும், பாசமும் வைத்துள்ள துணையிடம் அந்த சந்தோஷத்தைக் காண முயற்சியுங்கள். அவரை சந்தோஷப்படுத்தி அதில் நீங்களும் சந்தோஷமடையுங்கள். அவருக்கு எப்போதெல்லாம் மன ஆறுதல் தேவையோ, எப்போதெல்லாம் தொய்வடைந்து போகிறாரோ அப்போதெல்லாம் தேடிப் போய் மடியில் கிடத்தி மார்போடு அணைத்து மனசெல்லாம் குளிரச் செய்யுங்களேன்.. காலம் பூராவும் அவர் உங்களது அன்புக்கு அடிமையாக இருப்பார்.

 English summary
Is your sex life stuck into the shackles of boredom? Do you often feel a repetition in your act which turns you and your partner off? If you are nodding in approval, then you are suffering from bedroom boredom syndrome.
Story first published: Thursday, August 29, 2013, 15:33 [IST]
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras