ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில்தான் பிரிட்டன்வாசிகள் அதிக அளவில் உறவில் ஈடுபட ஆர்வம் காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.
காரணம் சூரியன் ஒளியில் இருந்து கிடைக்கும் சக்தி செக்ஸ் ஹார்மோனை தூண்டுகிறதாம். செரடோனின், டோபமைன், டெஸ்ட்டோடிரோன் போன்ற ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதும் இந்த மூன்று மாதங்களில்தானாம்.
குறைந்த உடையணிந்து பெண்கள் கவர்ச்சிகரமாக தோற்றமளிப்பதும் இந்த காலகட்டத்தில்தான். மேலும் அதிக அளவில் விடுமுறை கிடைப்பதும் கூடுதல் செக்ஸில் ஈடுபட ஒரு காரணமாக அமைவதாக பிரிட்டன்வாசிகள் கூறியுள்ளனர்.
செக்ஸ் மாதம்
தம்பதியர் உறவுக்கு ஏற்ற மாதம் எது என்பது பற்றி பிரிட்டனில் ஒரு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆகஸ்ட் மாதம்தான் அதிக அளவில் உறவில் ஈடுபடுவதாக பெரும்பாலான தம்பதியர் தெரிவித்துள்ளனர்.
ஹார்மோன்கள் லீலை
கோடை காலத்தில் சூரிய வெப்பத்தின் மூலம் செக்ஸ் ஹார்மோன் அதிக அளவில் தூண்டப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். செரடோனின், டோபமைன், டெஸ்டோஸ்டிரன் போன்ற ஹார்மோன்கள் இந்த மாதங்களில் அதிகம் சுரக்கின்றன. அவை செய்யும் லீலைதான் தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்க காரணமாக அமைகிறது.
ஜனவரியை விட ஜூலையில்
குளிர்காலமாக ஜனவரியை விட வெப்பமான ஜூன் மாதத்தில் 33 சதவிகிதம் அதிக அளவில் செக்ஸ் ஹார்மோன் சுரக்கிறதாம். கூடுதல் ஆர்கஸமும் கிடைக்கிறதாம்.
வைட்டமின் டி
வெயிலில் காய்வதன் மூலம் உடலில் வைட்டமின் டி சத்து அதிகரிக்கிறது. இதுவும் டெஸ்டோஸ்டிரன் சுரப்பு அதிகரிக்க காரணமாகிறதாம்.
ஆகஸ்ட், ஜூலை, ஜூன்
லவ் ஹனி என்ற செக்ஸ் பொம்மை விற்பனை நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் செக்ஸ் விளையாட்டுக்கு ஏற்ற மாதமாக ஆகஸ்ட் உள்ளது, இரண்டாவது இடத்தில் ஜூலையும் மூன்றாவதாக ஜூன் மாதமும் இடம் பெற்றுள்ளது.
சூரியனின் சக்திதான்
குளிர் காலத்தை விட கோடைதான் செக்ஸ் உறவுக்கு ஏற்றமாதமாக பிரிட்டன்வாசிகள் தெரிவித்துள்ளனர். காரணம். கோடை வெப்பத்தின் புழுக்கத்தை தணிக்க குறைந்த அளவிலான உடையை அணிந்து கவர்ச்சிகரமான தோற்றத்தில் இருப்பதும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.
கவர்ச்சியாக உணர்கின்றனர்
கோடையில் பெண்கள் தங்களை அதிக கவர்ச்சியாக உணர்வதும், அழகாக நினைப்பதும் ஒரு காரணமாக இருக்கிறது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
செக்ஸ் காலண்டர்
ஆகஸ்ட் மாதம் தொடங்கி ஜூலை, ஜூன், மே, டிசம்பர், செப்டம்பர், ஏப்ரல், அக்டோபர், மார்ச், ஜனவரி, நவம்பர், பிப்ரவரி என செக்ஸ் உறவில் ஈடுபட ஏற்ற மாதங்களை வரிசைப்படுத்தியுள்ளனர் பிரிட்டன் வாசிகள்
குளிர் காலத்தில் நோ
இந்த சர்வேயில் தெரியவந்த ஆச்சரியமான விசயம் என்னவெனில் ரொமான்ஸ்க்கு ஏற்றமாதம் என்று கூறப்பட்ட பிப்ரவரியில் குறைந்த அளவிலான உறவில்தான் ஈடுபடுகின்றனராம். இதற்கு காரணம் குளிர்காலத்தில் ஹார்மோன் சுரப்பு குறைவதுதான்.
ரொம்ப ஜாலியா இருக்கோம்
75 சதவிகித பிரிட்டன் வாசிகள் தங்களின் செக்ஸ் வாழ்க்கையில் திருப்திகரமாகவும், உற்சாகமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.