தலைவலியோ, உடல்வலியோ நம்மில் பலருக்கு வந்தால் டக்கென்று வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்வோம். ஆனால் முத்தம் கொடுப்பதன் மூலம் உடல்வலி மற்றும் தலைவலி பறந்து போகும் என்று கூறியுள்ளனர் நிபுணர்கள்.
அன்பு, பாசம், காதல் என எத்தனையோ உணர்வுகளை வெளிப்படுத்த உதவுவது முத்தம். முத்தம் என்னும் மந்திரசாவியின் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
சந்தோசத் தருணங்களில் கொடுக்கப்படும், பெறப்படும் முத்தம் மூலம் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்களேன்.
உறவுப் பிணைப்பு
உதட்டோடு உதடு ஒட்டி கொடுக்கப்படும் ஒத்தடம் தம்பதியரின் உறவுப் பிணைப்பை அதிகரிக்கும். ஆக்ஸிடோசின் சுரப்புதான் இந்த பிணைப்பை உருவாக்குகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
இதயத்திற்கு இதமானது
செக்ஸ் உறவின் திறவுகோள் முத்தம் என்பார்கள். அன்போடு முத்தம் கொடுக்கும் போது இதயத்திற்கு நன்மையளிக்கிறதாம். உறவின் முதல் தொடக்கமான முத்தமானது ரிலாக்ஸை தருகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
முத்தம் உடல் நலத்தோடு தொடர்புடையது. அன்போது கொடுக்கப்படும் முத்தம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமாம்.
தியானத்திற்கு ஒப்பானது
முத்தம் கொடுப்பதும், தியானம் செய்வதும் ஒன்றுதான் என்கின்றனர் மனநல நிபுணர்கள். தியானம் செய்வதன் மூலம் மனஅழுத்தம் நீங்கும். அதேபோல முத்தம் கொடுப்பதன் முலம் பெறுபவருக்கும், கொடுப்பவருக்கும் இறுக்கம் தளர்ந்து உற்சாகம் பிறக்கும். மனஅழுத்தம் ஓடிப்போகும்.
வலி நிவாரணி
முத்தம் சிறந்த வலிநிவாரணியாக செயல்படுகிறது. இது அட்ரீனலின் என்னும் ஹார்மோனை சுரக்கிறதாம். தலைவலியோ, உடல்வலியோ, அயர்ச்சியோ ஏற்பட்டால் உங்கள் துணையுடன் லிப் லாக் செய்யுங்கள் வலி ஓடிப்போகும் என்கின்றனர் நிபுணர்கள்.
கலோரி காணாமல் போகும்
முத்தம் தேவையற்ற கலோரிகளை எரித்து உடலை சிக் என்று வைக்கும். முகத்தில் எண்ணற்ற செயல்பாடுக்களை ஏற்படுத்தி இளமையை தக்கவைக்கும். முத்தம் கொடுப்பதை சந்தோசமாக கொடுங்கள். உங்கள் துணை முத்தம் கொடுக்க வரும் போது மறுப்பு தெரிவிக்க வேண்டாம் சந்தோசமாக பெற்றுக் கொள்ளுங்கள். இது இருவருக்குமே நன்மை தரக்கூடியது என்கின்றனர் நிபுணர்கள்.