காதலையும், அன்பையும் உயிர்ப்போடு வைத்திருப்பது ரொமான்ஸ் நினைவுகளும், செயல்படுகளும்தான். தினந்தோறும் அலுவலகம், வேலை, சாப்பாடு, தூக்கம் என அலுப்போடு நகரும் வேலையில் தம்பதியரிடையே சின்னச் சின்ன சந்தோசங்களை தருபவை ரொமான்ஸ் செயல்பாடுகள்தான்.
ஒருவருக்கொருவர் செல்லப் பெயர் சூட்டி அழைப்பது, படுக்கை அறையில் கொஞ்சுவது, அடுத்தவர் முன்பு சங்கேத பாஷைகளை பயன்படுத்தி பேசுவது போன்றவை தாம்பத்யத்தில் சந்தோச சங்கீத பேரலைகளை ஏற்படுத்தும்.
அப்புறம் என்ன திளைக்க திளைக்க சந்தோசத்தை அளிக்கும் மனைவியைப் பார்த்து "நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்" என்று கவிதை பாடி உச்சி குளிர முத்தம் கொடுக்கத்தான் செய்வார் கணவர்.
தம்பதியர் பயன்படுத்தும் சங்கேத வார்த்தைகள், செயல்பாடுகளைப் பற்றி நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.
மணக்கும் மல்லிகைப் பூ
தமிழ்நாட்டுப் பெண்களுக்கு மணக்கும் மல்லிகைப் பூ என்றால் ரொம்பப் பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். பாட்டன் காலத்து டெக்னிக்தான் என்றாலும் அலுவலகம் முடிந்து வீட்டுக்குப் போகும் போது கொஞ்சம் பூவோடு போங்களேன். அதுவே சங்கேத பாஷைதான் என்கின்றனர்.
சின்னதாய் குளியல்
அலுவலகம் முடிந்து வீட்டிற்கு நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். எனவே போய் மிதமான சுடுநீரில் சின்னதாய் ஒரு குளியல் போடுங்களேன். அப்போதே புரிந்து கொள்வார் இன்றைக்கு ஏதோ சம்திங் சம்திங் என்று.
நான் ரெடி நீ ரெடியா?
சில விசயங்களை நேரடியாக கேட்பதை விட சங்கேத பாஷைகளில் கேட்பது உணர்வுகளுக்கு உற்சாகம் தருமாம். இன்றைக்கு கேசரி செய்றியா? முந்திரிப் பருப்பு நெறைய போட்டு ஸ்வீட் செய்யேன் என்பது போன்ற பேச்சுக்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு புரியாவிட்டாலும் உங்களவருக்கு கண்டிப்பாக புரியும்.
மசாஜ் செய்யவா?
சின்னதாய் ஊடல் ஏற்பட்டு உங்களுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டிருந்தால் நல்லாதாகப் போயிற்று என்று நீங்களும் திரும்பி படுத்துக் கொள்ளாதீர்கள். முடிந்த வரை சமாதானம் செய்யுங்கள். இருக்கவே இருக்கு மசாஜ் டெக்னிக். அப்புறம் ஊடலாவது ஒன்றாவது.
பூனைக்குட்டிக்கு என்ன ஆச்சு?
செல்லப் பெயர் ரொம்ப முக்கியம். அதுவும் பெர்சனல் நேரங்களில் கொஞ்சும் போது செல்லப் பெயர் பயன்படுத்தினால் உறவுப் பிணைப்பு அதிகமாகும். பிராணிகளின் பெயர் சூட்டுவதைத்தான் அதிகம் விரும்புகின்றனராம். கோபமான தருணங்களில் செல்லப் பெயரில் கொஞ்சலாய் திட்டுவது கூடுதல் ரொமான்ஸ்.
பிக்சிங் அவசியம்
தம்பதியர் பயன்படுத்தும் சங்கேத வார்த்தைகள் கண்டிப்பாக இருவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அது ரசனைக்குரியதாக இருக்கும். அந்த சங்கேத வார்த்தைகள் அந்தரங்கமானவை அதை தப்பித்தவறி யாருக்கும் சொல்லிவிட வேண்டாம் அப்புறம் அதுவே சிக்கலாகிவிடும்.