ஒரு உறவு முடிந்து.. அது முறிந்து.. மனசெல்லாம் சிதறி நிற்கும்போது பெரும் வெற்றிடம் ஏற்படும் .. மனதில். அதுபோன்ற சமயத்தில் கேஷுவல் செக்ஸ் ஆறுதல் தரும் என்கிறார்கள் நிபுணர்கள்.
உறவுகள் தொடர்கதை.. உணர்வுகள் சிறுகதை என்பார்கள். நீடித்து வருவது உறவு மட்டும்தான். உணர்வுகளுக்கு ஆயுள் குறைவு. ஆனால் சில நேரங்களில் உணர்ச்சிகரமான முடிவுகளால் உறவுகள் முறிந்து போய் விடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் மனம் அடையும் வேதனையும், வலியும் அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.
இப்படிப்பட்ட நேரத்தில் கேஷுவல் செக்ஸில் ஈடுபடுவது நல்லதாம். ஆனால் இந்த கேஷுவல் செக்ஸில் ஈடுபடுவது என்பது மன நிலையைப் பொறுத்தது. கண்டிப்பாக ஈடுபட்டே ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதும் நிபுணர்களின் கருத்தாகும்.
மனதில் ஏற்பட்ட காயத்தை சரி செய்ய செக்ஸில் ஈடுபடுவது நல்ல மருந்து சாப்பிடுவது போல என்பது இந்த நிபுணர்கள் தரும் விளக்கமாகும்.
மிகவும் சாதாரண முறையில், ஹாயாக செக்ஸில் ஈடுபடலாமாம். அதேசமயம், அதை உணர்ச்சிகரமாகவோ அல்லது மிகவும் சீரியஸானதாகவோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.
இந்த செக்ஸானது நடந்த கசப்பான முறிவை சற்றே மறந்து மனசு லேசாகவும், ரிலாக்ஸ் ஆகவும் உதவுகிறதாம்.
இந்த உடனடி செக்ஸானது அடுத்து நாம் செய்ய வேண்டியது குறித்து நிதானமான முறையில் சிந்திக்கவும் உதவுகிறதாம்.
சிலருக்கு உணர்வுகளை மறப்பதும், துண்டிப்பதும் மிகப் பெரிய கஷ்டமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த கேஷுவல் செக்ஸால் கூட நிவாரணம் தர முடியாதநிலை ஏற்படலாம் என்றும் நிபுணர்கள் சொல்கிறார்கள்.
அதேசமயம், செக்ஸில் ஈடுபட்டால் ரிலாக்ஸ் கிடைக்கும் என்று உணரும் பட்சத்தில்தான் அதற்குப் போக வேண்டுமாம். இல்லாவிட்டால் அதனால் வேறு ஏதாவது டென்ஷன் வந்து சேர வாய்ப்புண்டாம்.