கலிபோர்னியா: காமசூத்ரா புத்தகம் ஒன்றை 3டியில் கொண்டு வந்துள்ளனர் அமெரிக்காவில்.இதை படிக்கும்போது முப்பரிமாணத் தோற்றத்தில் அதில் உள்ள புகைப்படங்களை நாம் பார்க்க முடியும் என்பதுதான் இதில் விசேஷமானது.
உலகில் எந்த புத்தகத்தையும் விட காமசூத்ரா புத்தகத்துக்கு எப்பவுமே கிராக்கிதான். இப்போது அந்தப் புத்தகத்திலும் நவீனத்தைப் புகுத்தியுள்ளனர்.
இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள புகைப்படங்கள் குறிப்பாக செக்ஸ் பொசிஷன்கள் குறித்த புகைப்படங்களை 3டியில் பார்க்க முடியும் என்பதுதான் இதன் விசேஷமே.
ஹோலோகிராம்கள்...
இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள புகைப்படங்கள் ஹோலோகிராம்களாக இடம் பெற்றுள்ளன.
எப்படிப் படிக்கனும் தெரியுமா...
இந்தப் புத்தகத்தை படிக்கும்போது கூடவே ஸ்மார்ட் போன் அல்லது டேப்லட் கூடவே இருக்க வேண்டும். அப்போதுதான் படத்தை 3டியில் பார்க்க முடியும். இந்தப் புகைப்படங்கள் மீது டேப்லட்டையோ அல்லது ஸ்மார்ட் போனையோ வைத்து பார்க்கும்போது அந்தப் படங்களை நாம் முப்பரிமாணத்தில் பார்க்க முடியும். ஒவ்வொரு பொசிஷனையும் முப்பரிமாணத்தில் பார்த்து ரசிக்கலாம்.
காம எக்ஸைட்ரா
இந்த நூலுக்கு காம எக்ஸைட்ரா - Kama Xcitra - என்று பெயர் வைத்துள்ளனர். இந்த நூலில் அனைத்து விதமான செக்ஸ் பொசிசன்கள் குறித்தும் விரிவாக எழுதியுள்ளனர். துல்லியமான புகைப்படங்களுடன்.
69 பொசிஷன்கள்
இந்த நூலில் மொத்தம் 69 வகையான பொசிஷன்கள் இடம் பெற்றுள்ளன.இதுதொடர்பான புகைப்படங்களைத்தான் நாம் புதிய தொழில்நுட்பத்தில் பார்த்து ரசிக்க முடிகிறது. கூடவே இசையையும் இணைத்துள்ளனர்.
2000 ஆண்டுகளுக்கு முன்பு
கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதுதான் காமசூத்ரா. மனிதனின் செக்ஸ் உறவு குறித்த நூலாகும் இது.
1883ல் ஆங்கிலத்தில்
காமசூத்ரா நூல் 1883ம் ஆண்டு முதல் முறையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. அதை செய்தவர் ரிச்சர்ட் பர்டன் என்பவர்.
கிளிண்டனே வாங்கிட்டாரு
சமீபத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்னிடம் இந்த நூலின் பிரதியை விற்றுள்ளனர். அவரும் மகிழ்ச்சி பொங்க புத்தகத்தை பெற்றுக்கொண்டார்.
இந்தியாவில் காமசூத்ரா 3 டி படம் உருவாகி வரும் நிலையில் தற்போது 3டி புத்தகம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications



